Published:Updated:

நிகர்நிலைப் பல்கலையின் தரம் குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பல்கலைக்கழகங்களின் மானியக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தரம் குறைந்த பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்த பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் மானியக்குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அறிக்கை தாக்கல் செய்த மானியக்குழு, தமிழகத்தில் 14 தரம் குறைந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தரம் குறைந்த பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று அறிக்கை வழங்காதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பல்கலைக்கழகங்களின் மானியக்குழுவுக்கு உத்தரவிட்டது.