Published:Updated:

நிலக்கரி வழக்குகளை முடித்து வைக்கக்கூடாது: சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிலக்கரி ஒதுக்கீடு வழக்குகளில் தற்போதைக்கு வழக்கை முடித்து வைத்தல் போன்ற. எந்த நடவடிக்கையும் சி.பி.ஐ  மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக பிசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "நிலக்கரி ஒதுக்கீட்டில் இடைத்தரகராக கருதப்படும் மொயின் குரேஷியை 90 முறை சி.பி.ஐ. இயக்குநர் சந்தித்து உள்ளார். எனவே, நிலக்கரி ஒதுக்கீடு வழக்கில் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் விலகியிருக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (19ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரசாந்த் பூஷணின் புகார் உள்நோக்கம் கொண்டது என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவு, வழக்கை முடித்து வைத்தல் போன்ற எந்த நடவடிக்கையும் தற்போதைக்கு சி.பி.ஐ. எடுக்கக்கூடாது என உத்தரவிட்டதோடு, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.