Published:Updated:

அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத மருத்துவ கல்லூரிகள்: மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

Vikatan Correspondent

புதுடெல்லி: அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) நாடு முழுவதும் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறி, அவற்றின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. இதனால், அக்கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை  நடத்தப்படவில்லை. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, அந்த கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு, நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரிகளில் நிலவும் குறைபாடுகளை சரிசெய்து விடுவதாக கல்லூரிகள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அந்த உத்தரவில், ''சம்பந்தப்பட்ட கல்லூரிகள், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தலாம். தங்கள் கல்லூரியில் எந்த குறைபாடும் இல்லை என்று கல்லூரியின் தலைவரும், செயலாளரும் இன்றிலிருந்து 10 நாட்களுக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும், அடுத்த ஆய்வின்போது, இந்த உத்தரவாதத்தை மீறி குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரூ.10 கோடி டெபாசிட் தொகையை அபராதமாக கருதி பறிமுதல் செய்து கொள்ளலாம் என்றும் தலைவரும், செயலாளரும் எழுதித்தர வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.