Published:Updated:

ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

விகடன் விமர்சனக்குழு
ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

புது டெல்லி: ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் பரிதாப நிலையை சரி செய்யவில்லை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் , ஏர் இந்தியா நிறுவனத்தை இணைப்பதற்கு இசைவு தெரிவித்து, தர்மாதிகாரி ஆணையம்  அளித்த பரிந்துரைக்கு,  இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக

ஏர் இந்தியாவின் பரிதாப நிலை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

விசாரணை நடத்திய நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு, தொடர்ந்து நஷ்டக் கணக்கையே காட்டிவரும் ஏர் இந்தியா நிறுவன நிர்வாகத்திற்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"லாபகரமான வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, நஷ்டம் வரக்கூடிய வழித்தடங்களில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குவது ஏன்?

விமான நிலையங்களில் தனியார் விமானங்கள் தரையிறங்குவதற்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு, அவை இறங்கி முடிக்கும்வரை, வீணாக எரிபொருளை செலவழித்து வானத்தில் வட்டமிட்டு சுற்றுமாறு அரசுக்கு சொந்தமான விமானங்கள் நிர்ப்பந்திக்கப்படுவது ஏன்?

மற்ற நிறுவனங்களின் விமானங்களில் பயணித்தவர்கள், புதிதாக ஏர் இந்தியாவில் பயணிக்கும் போது, ‘ஏன் .., இந்த விமானத்தில் ஏறினோம்?’ என்று நொந்துக் கொள்ளும் அளவுக்கு விமான சேவைகளின் தரமும் படுமோசமாக இருப்பது, மிகவும் வருந்தத்தக்கது.

ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வருவதுடன், வாடிக்கையாளர்களின் அதிருப்தியையும் சந்தித்துவரும் ஏர் இந்தியா அழிந்துவிடக் கூடும். இந்த நிலையை மாற்ற நாம் முன்வர வேண்டும்" என்று  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.