Published:Updated:

2 ஜி: தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

2 ஜி: தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
2 ஜி: தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
2 ஜி: தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி:  2ஜி விவகாரத்தில், கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிடுக்க கோரி அவரது மகள் செல்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க மறுத்ததோடு, செல்வி மனுவை தள்ளுபடி செய்தது.