Published:Updated:

69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி: 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி சாகித்யா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 50 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் பொதுப் பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக வரும் 17ஆம் தேதிக்குள் பதில் அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.