Published:Updated:

ஆதார் விவகாரம்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Vikatan Correspondent
ஆதார் விவகாரம்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
ஆதார் விவகாரம்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
ஆதார் விவகாரம்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: ஆதார் அடையாள அட்டை தொடர்பாக தனது முந்தைய உத்தரவுகளை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களையும், மானியங்களையும் பெறுவதற்கு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு திட்டங்களையும், மானியங்களையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை தேவையில்லை என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று இது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அரசின் திட்டங்களையும், மானியங்களையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என ஏற்கனவே பலமுறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.