Published:Updated:

வியாபம் ஊழல்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!

வியாபம் ஊழல்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
வியாபம் ஊழல்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!

வியாபம் ஊழல்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வியாபம் ஊழல்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 49 பேரின் உயிரைப் பலிவாங்கிய வியாபம் முறைகேடு விவகாரத்தில், விசாரணை முடிந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான `வியாபம்` நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பலநூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2009 ஆம்  ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஊழலில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தொடர்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக போபால் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 5 ஆண்டுகளில் 49 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நுழைவுத் தேர்வு ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள், அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்ததையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 'வியாபம்' முறைகேட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க, உச்ச நீதிமன்றம்  அனுமதி அளித்தது. இதையடுத்து, 'வியாபம்' வழக்கு விசாரணையை கையில் எடுத்துள்ள சிபிஐ, தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு புதிய வழக்குகளை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "185 க்கும் மேலான 'வியாபம்' வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்து சிபிஐ எடுத்துக்கொண்டுள்ளதால், விசாரணைக்கு அதிக காலம் பிடிக்கும்.

எனவே, விசாரணை முடிந்த வழக்குகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக ஜாமீன் கிடைத்து விடும்" என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி அமிதாவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சிபிஐ மனு மீது பதில் அளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்று ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு