Published:Updated:

``குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவனை, வீட்டை விட்டு வெளியேற்றலாம்": சென்னை உயர் நீதிமன்றம்!

குடும்ப வன்முறை ( மாதிரிப் படம் )

குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தி, குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவனை ஒரேவீட்டில் வசிக்கலாம் என அனுமதிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

``குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவனை, வீட்டை விட்டு வெளியேற்றலாம்": சென்னை உயர் நீதிமன்றம்!

குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தி, குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவனை ஒரேவீட்டில் வசிக்கலாம் என அனுமதிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Published:Updated:
குடும்ப வன்முறை ( மாதிரிப் படம் )

குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவனை, குடும்ப அமைதியைக் காக்க வீட்டைவிட்டு வெளியேற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

abuse
abuse

குடும்ப வன்முறையில் கணவர் ஈடுபடுவதாக, பெண் ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் `கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வசிக்கலாம்; ஆனால் கணவன் அவரின் மனைவியைத் தொந்தரவு செய்யக்கூடாது' எனக் கூறி உத்தரவிட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னுடைய தொழில் வாழ்வுடன் ஒத்துப்போகாத கணவர் தன் மீதான அடக்குமுறையில் ஈடுபடுவதாகக் கூறி அந்தப் பெண் கணவனை வீட்டில் இருந்து வெளியேற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். என். மஞ்சுளா அடங்கிய நீதிமன்ற அமர்வு, இவ்வழக்கு தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தது.

அதில், ``கணவனை வீட்டிலிருந்து வெளியேற்றுவது மட்டுமே குடும்ப அமைதியை உறுதிப்படுத்தும் எனில், அந்த கணவனுக்குச் சொந்தமாக வேறு ஏதும் தங்குமிடம் உள்ளதா இல்லையா என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வீட்டை விட்டு கணவனை வெளியேற்ற நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.

 court
court

அதுமட்டுமல்லாமல், உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு வாரங்களுக்குள் வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். அவ்வாறு வெளியேறத் தவறும் பட்சத்தில், அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற, காவல்துறை அதிகாரிகள் அனுப்பப்படுவர்.

திருமண உறவுகள் சரியான பாதையில் பயணிக்காதபோதும், தம்பதியர் சேர்ந்து வாழலாம். ஆனால் ஒரு தரப்பினர் கட்டுக்கடங்காமல், வன்முறையான அணுகுமுறையை மற்றவரிடம் வெளிப்படுத்துவதென்பது முற்றிலும் மாறுபட்ட சூழல். இத்தகைய பாதகமான சூழலில் மனுதாரரையும், அவரின் குழந்தைகளையும் பயத்தோடும், பாதுகாப்பின்மையோடும் தொடர்ந்து ஒரே வீட்டில் வாழ வற்புறுத்த முடியாது.

குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி, குடும்ப வன்முறையில் ஈடுபடும் கணவனை ஒரே வீட்டில் வசிக்கலாம் என அனுமதிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.