Published:Updated:

``பருவமடைந்த முஸ்லிம் பெண், பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்யலாம்'': டெல்லி உயர் நீதிமன்றம்!

Woman (Representational Image) ( Photo by Ida Rizkha from Pexels )

சட்டப்படி திருமணம் செய்துகொண்ட தம்பதியர் ஒன்றாக இருப்பதை மறுக்க முடியாது; இதுதான் திருமணத்தின் சாராம்சம். அவர்களைப் பிரிக்க அவர்களின் அந்தரங்கத்தில் அரசு நுழையக் கூடாது

``பருவமடைந்த முஸ்லிம் பெண், பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்யலாம்'': டெல்லி உயர் நீதிமன்றம்!

சட்டப்படி திருமணம் செய்துகொண்ட தம்பதியர் ஒன்றாக இருப்பதை மறுக்க முடியாது; இதுதான் திருமணத்தின் சாராம்சம். அவர்களைப் பிரிக்க அவர்களின் அந்தரங்கத்தில் அரசு நுழையக் கூடாது

Published:Updated:
Woman (Representational Image) ( Photo by Ida Rizkha from Pexels )

`பருவமடைந்த பிறகு, முஸ்லிம் பெண் பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்துகொள்ளலாம்’ என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Marriage
Marriage
Photo by Benita Elizabeth Vivin on Unsplash

பீகாரில், மத வழக்கப்படி திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் தம்பதியினருக்கு, பெண்ணின் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர, பாதுகாப்பு வேண்டி உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை நீதிபதி ஜஸ்மீத் சிங் (Jasmeet Singh) விசாரித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையில், ``இஸ்லாமிய சட்டத்தின்படி, பருவமடைந்த பெண் தன்னுடைய பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்துகொள்ளலாம். அந்தப் பெண் 18 வயதுக்குக் குறைவாக, மைனர் பெண்ணாக இருந்தாலும் கணவனுடன் வசிக்க உரிமை உண்டு.

மேற்குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் திருமணமானபோது வயது 15. வேறொரு நபரைத் திருமணம் செய்யச் சொல்லி பெண்ணின் வீட்டார் தொடர்ச்சியாக அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இவர்கள் பிரிக்கப்பட்டாலும், அது அந்தப் பெண்ணுக்கும், இன்னும் பிறக்காத வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்குத் தொடுத்த பெண் மனுதாரரைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு'' என்று குறிப்பிட்டுள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதால், திருமணமான தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

court
court

அதோடு `போக்ஸோ சட்டமானது, குழந்தைகளின் இளமைப் பருவத்தைப் பாதுகாக்க, அவர்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் இருக்க, அவர்களின் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தில் எவ்வித சுரண்டலுக்கும் ஆளாகாமல் இருக்க ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் எவ்விதச் சுரண்டலோ பொய்யான திருமண பந்தத்தின் அடிப்படையிலான பாலியல் உறவோ இல்லை. இவர்கள் இருவரும் காதலித்து, முஸ்லிம் சட்டத்தின்படி திருமணம் செய்துள்ளனர். அதன் பின்பே உடல் ரீதியான உறவை மேற்கொண்டுள்ளனர்.

சட்டப்படி திருமணம் செய்துகொண்ட தம்பதியர் ஒன்றாக இருப்பதை மறுக்க முடியாது; இதுதான் திருமணத்தின் சாராம்சம். அவர்களைப் பிரிக்க அவர்களின் அந்தரங்கத்தில் அரசு நுழையக் கூடாது’ என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் அடிக்கோடிட்டு காட்டி உள்ளது.