Published:Updated:

தமிழ்நாட்டில் இனி தைல மரங்கள் வளர்க்கக் கூடாது... நீதிமன்றத்தின் உத்தரவு சரியா?

யூகலிப்டஸ் மரங்கள்

ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் அரசு நிலங்களிலும், தனியார் நிலங்களிலும் தைல மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து தைல மரங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் கணிசமான பங்கை வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் இனி தைல மரங்கள் வளர்க்கக் கூடாது... நீதிமன்றத்தின் உத்தரவு சரியா?

ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் அரசு நிலங்களிலும், தனியார் நிலங்களிலும் தைல மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து தைல மரங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் கணிசமான பங்கை வழங்கி வருகின்றன.

Published:Updated:
யூகலிப்டஸ் மரங்கள்

ஆங்கிலேயர்களால் 19-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட யூகலிப்டஸ் எனச் சொல்லப்படக்கூடிய தைல மரம், மருத்துவம் மற்றும் காகிதத்தின் பயன்பாட்டுக்காகப் பெருமளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இம்மரத்தின் பயன்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று சென்னை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

chennai high court
chennai high court

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், ``வனப்பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றுவது தொடர்பாகத் தமிழக அரசு சென்ற 13-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாவட்ட அளவில் இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்ததந்த மாவட்டங்களின் வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். எனவே, அடுத்த 10 ஆண்டுக்குள் வனப்பகுதியில் இருந்து அன்னிய மரங்கள் முழுமையாக அகற்றப்படும்” எனக் குறிப்பிட்டு இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வழக்கை விசாரித்து வரும் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிபதிகள் அமர்வில், தமிழக அரசின் தரப்பிலிருந்து தரப்பட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், ``தமிழக அரசு ஆக்கபூர்வமாகச் செயல்படவில்லை. அந்நிய மரங்களை அகற்றும் பணிகளைத் தனியாருக்குக் கொடுத்தாலே, விரைவில் முடியும். இதற்காக 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் எனக் கூறும் அரசே, ஏன் யூகலிப்டஸ் மரங்களை நட வேண்டும். இனி, தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதிக்கிறோம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையெடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

யூகலிப்டஸ்  மரங்கள்
யூகலிப்டஸ் மரங்கள்

தைல மரச் சாகுபடிக்கு தடை விதித்திருப்பது குறித்து ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் பேசினோம். ``காகித தயாரிப்பில் முதல் தரமான காகிதத்தைத் தயாரிக்க தைல மரங்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதை வைத்துதான் கரூர் மாவட்டம், புகளூரில் காகித ஆலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று மருத்துவத்துறையிலும் தைல மர இலைகளின் பயன்பாடு இருந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் அரசு நிலங்களிலும், தனியார் நிலங்களிலும் தைல மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து தைல மரங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. அந்நிய செலாவணியை ஈட்டி தருவதில் கணிசமான பங்கை வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டிலும் ஊட்டி, கொடைக்கானல் தவிர்த்து புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வறட்சியான நிலங்களிலும் வளரக்கூடியது. தண்ணீர் ஊற்றிதான் வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தளவுக்கு மழையிலிருந்து கிடைக்கும் நீரைக்கொண்டே வளரும் தன்மைகொண்டது. இப்படி ஏதோவொரு விதத்தில் பயன்தரக்கூடிய மரங்களை வளர்ப்பதற்கு தடை விதிப்பது அந்த மர இனங்களையே அழித்துவிடும். தண்ணீரை அதிகம் உறிஞ்சுகிறது என்று புகார் சொல்கிறார்கள். நெல் சாகுபடிக்குக்கூட தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக நெல் சாகுபடிக்கு தடை விதித்து விட முடியுமா? எனவே, தைல மரங்களின் சாதக பாதக அம்சங்களை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நீலகிரி
நீலகிரி

ஓய்வுபெற்ற வன பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசியபோது, ``சீமைக்கருவேல மரங்கள் எந்தளவுக்கு பாதிப்புகளை விளைவிக்கிறதோ அந்தளவுக்கு தைல மரங்களும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. தைல மரங்கள் அதிக தண்ணீரை உறிஞ்சுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மரத்துக்கடியில் பிற தாவரங்களை வளரவிடாமலும் செய்துவிடும். கொடைக்கானல், உதகமண்டலம் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு ஓய்வெடுக்கப்போன ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தைல மரக்கன்றுகளைக் கொண்டு வந்து புல்தரைகளையெல்லாம் வேஸ்ட் லேண்டு என்ற நினைத்து நட்டுவிட்டனர்.

ராஜசேகரன்
ராஜசேகரன்

வளர்ந்த மரங்களை என்ன செய்வதென்று தெரியாமல் பேப்பர் இண்டஸ்டரிக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். தைல மரச் சாகுபடியால் தமிழ்நாட்டின் மலைகளில் உள்ள சோலைக் காடுகள் அழிந்ததுதான் மிச்சம். எனவே, நீதிமன்றத்தின் உத்தரவு சரியே. பேப்பர் இண்டஸ்ட்ரி பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அதற்கான தேவையை மூங்கில் மரங்கள் சரி செய்துவிடும். இந்தியாவில் மூங்கில் நன்றாக வளர்கிறது. அதனால் நாம் மூங்கில் சாகுபடியை ஊக்குவிக்கலாம்” என்றார்.