Published:Updated:

`பொது இடத்தைக் கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்!’ - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை நீதிமன்ற உத்தரவு

``பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார்.

நாமக்கல் அருகே மாரியம்மன் கோயிலால் பொதுச்சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பாப்பா என்பவர் நாமக்கல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ``பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை உயர் நீதிமன்றம் அகற்ற உத்தரவிடும்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி, நீதிமன்றத்தின் கண்ணை மறைக்க முடியாது. ஏற்கெனவே போதிய எண்ணிக்கையில் கோயில்கள் இருக்கும்போது, பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை. நாமக்கல் அருகே பொதுச்சாலையில் மாரியம்மன் கோயில் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் இரண்டு மாதங்களில் அகற்ற வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism