Published:Updated:

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் 180% அதிகரிப்பு; அதிகாரிகள் விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைத் தொழிலாளர் ( கோப்பு படம் )

தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் 180% அதிகரித்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு வைத்ததாக, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ.14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் 180% அதிகரிப்பு; அதிகாரிகள் விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் 180% அதிகரித்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு வைத்ததாக, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ.14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப் பட்டுள்ளது.

Published:Updated:
குழந்தைத் தொழிலாளர் ( கோப்பு படம் )

தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்றாக, குழந்தைத் தொழிலாளர் முறை கருதப்படுகிறது. குடும்பங்களில் நிலவும் வறுமையே இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. அதற்காக குழந்தைகளின் கனவுகளை கலைத்து, அவர்களை வேலைக்கு அனுப்பும் இந்த சித்ரவதைச் செயலை நியாயப்படுத்த முடியாது. இதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள், பல்வேறு தொண்டு அமைப்புகள், தன்னார்வலர்கள் முயன்று வருகின்றனர். எனினும், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவது என்பது கடும் சவாலாக உள்ளது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 180% அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``2021-ம் ஆண்டு CACL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் 180% அதிகரித்துள்ளதனர் என்பது தெரியவந்துள்ளது. பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு வைத்ததாக, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ.14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2016-ம் ஆண்டு வரை நாட்டில் 1,75,000 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகரித்துள்ளதாக, வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து, மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும்; அவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

World Day Against Child Labour - Chutti Vikatan
World Day Against Child Labour - Chutti Vikatan

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, ``தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 180 சதவிகிதம் அதிகரித்துள்ளது வேதனைக்குரியது. இதை முற்றிலுமாக ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அத்துடன், இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் செயலாளர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலாளர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர், செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கு, நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.