Published:Updated:

2 சூட்கேஸ்களில் அடைக்கப்பட்ட உடல்பாகங்கள்! - கோவைப் பெண்ணைக் கொடூரமாக் கொன்ற இளைஞருக்குத் தூக்கு

நகைக்காக பெண்ணை கொலை செய்தவருக்கு தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது கோவை நீதிமன்றம்.

யாசர் அராஃபத்
யாசர் அராஃபத்

கோவை வரலாற்றில் மறையாத, ரத்தக் கறையாகப் படிந்த தேதி 21.2.2013. அவிநாசி சாலையில் உள்ள ரஹேஜா அடுக்கு மாடிக் குடியிருப்பில், சரோஜினி (54) என்ற பெண் நகைக்காக துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்டார். இரண்டு சூட்கேஸ்களில், ஏழு துண்டுகளாக சரோஜியின் கை, கால்கள் மற்றும் உடல் உறுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

சரோஜினி
சரோஜினி

துர்நாற்றம் வீசாமல் இருக்க, அதில் சிமென்ட் பூசப்பட்டிருந்தது. தொடைப் பகுதி சூட்கேஸ்குள் செல்லாததால், பிளாஸ்டிக் பையில் சிமென்ட் வைத்து அடைத்து, பரண் மீது போட்டுள்ளார்.

`வாங்கிய ரூ.3 லட்சத்தைத் தருகிறேன், வாங்க!'‍‍ - பிரசாதத்தில் விஷம் வைத்து சென்னை பேராசிரியர் கொலை

நாளடைவில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம், பக்கத்தினர் சொன்னபோதுதான் விஷயம் வெளி உலகுக்கு வந்தது. சரோஜினியின் உடல் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சூட்கேஸில் சரோஜினியின் உடல் உறுப்பு
சூட்கேஸில் சரோஜினியின் உடல் உறுப்பு

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த யாசர் அராஃபத் (33) என்பவர்தான், இந்தக் கொடூர கொலையைச் செய்தவர். இதையடுத்து, விசாகப்பட்டினத்தில் வைத்து யாசர் அராஃபத்தை போலீஸார் கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற கணவர், மகன், மருமகள், நான்கு வயது பேரன் என்று மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத குடும்பத்தைச் சேர்ந்த சரோஜினி 12 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த வழக்கில் கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி கொலையாளி யாசருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பு அளித்துள்ளார்.

யாசர் அராஃபத்
யாசர் அராஃபத்

மேலும், தடயங்களை மறைத்தது, நகை திருடியது போன்ற குற்றங்களுக்கு 14 ஆண்டுச் சிறை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளது.