Published:Updated:

பெண்கள் உடை குறித்து சர்ச்சை கருத்து; கேரள நீதிபதியின் இடமாற்றம் ரத்து!

Kerala High Court

`மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி, இடமாற்றம் செய்வதற்கு முன்பு சரியான விசாரணை நடத்தவில்லை என்பதால் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். நானும் நீதி வழங்கும் இடத்தில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார் கேரளாவின் பிரபல எழுத்தாளர் சிவிக் சந்திரன்.

பெண்கள் உடை குறித்து சர்ச்சை கருத்து; கேரள நீதிபதியின் இடமாற்றம் ரத்து!

`மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி, இடமாற்றம் செய்வதற்கு முன்பு சரியான விசாரணை நடத்தவில்லை என்பதால் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். நானும் நீதி வழங்கும் இடத்தில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார் கேரளாவின் பிரபல எழுத்தாளர் சிவிக் சந்திரன்.

Published:Updated:
Kerala High Court

பெண்கள் ஆடை அணிவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய கேரளா மாநிலத்தின் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணகுமாரின் இடமாற்ற உத்தரவை, கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது.

கேரளாவில், எழுத்தாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண் எழுத்தாளர் ஒருவர், கேரளாவின் பிரபல எழுத்தாளர் சிவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக, சிவிக் சந்திரன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கியிருந்த செஷன்ஸ் நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார், `பெண் எழுத்தாளர், அன்றைய தினம் கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்திருந்தார். அதனால்தான் இப்படியான சம்பவம் நடந்துள்ளது. பெண்களின் உடைத் தேர்வு, இதுபோன்ற பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு காரணமாக அமையும்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். பெண்கள் உடை குறித்து இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்த நீதிபதிக்கு எதிராக, பல தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்தும், பெண் உடை குறித்த நீதிபதியின் கருத்து குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று, பெண் எழுத்தாளர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிபதியை கொல்லம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியாக இடமாற்றம் செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, நீதிபதி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பெண் சுதந்திரம்
பெண் சுதந்திரம்

நீதிபதி தனது மேல்முறையீட்டு மனுவில், `நீதி நிர்வாகத்தில் மூன்று வருட காலத்தின் போது, தேவைப்பட்டால் தகுந்த கரணங்கள் இருந்தால் மட்டுமே நீதித்துறை அதிகாரியை மாற்றலாம். வழக்கின் உண்மைகளை தனி நீதிபதி பரிசீலிக்கத் தவறிவிட்டார். மேலும் மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி, இடமாற்றம் செய்வதற்கு முன்பு சரியான விசாரணை நடத்தவில்லை என்பதால் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். நானும் நீதி வழங்கும் இடத்தில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமாரின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.