Published:Updated:

`செக்ஸ் வேண்டாமென்று சொல்ல மனைவிக்கும் உரிமை உண்டு!' - டெல்லி உயர்நீதிமன்றம்

Law (Representational Image)
News
Law (Representational Image) ( Photo: Unsplash )

எல்லா பெண்களுக்கும் சம்மதமற்ற பாலியல் செயலுக்கு 'விருப்பமில்லை' என்று சொல்ல உரிமை உண்டு என்று டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

விருப்பமற்ற பாலியல் உறவுக்கு `நோ' சொல்ல, எல்லா பெண்களுக்கும் உரிமை உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணமாகாமல் இணைந்து வாழும் ஜோடிகள் இடையே விருப்பமற்ற பாலியல் உறவு நிகழ்ந்தால் சட்டப்படி குற்றம். ஆனால், திருமணமான தம்பதியர் இடையே விருப்பமற்ற பாலியல் உறவு (Marital Rape) நடந்தால், அது சட்டப்படி குற்றமாகாது என்பது குறித்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு , ``ஒரு பெண் திருமணமானவள் என்பதால், `செக்ஸ் வேண்டாம்' என்று சொல்லும் உரிமையை இழந்துவிடுவாளா?

Woman (Representational Image)
Woman (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு விருப்பமற்ற பாலியல் உறவுக்கு கணவரால் உட்படுத்தப்பட்டால், பாலியல் வன்முறை பிரிவின் கீழ் புகார் தெரிவிக்க முடியாது. கொடுமைப்படுத்தினார் என்று மட்டுமே புகாரளிக்க முடியும். அப்படியென்றால், திருமணமான பெண், கணவனால் வலுக்கட்டாயமான உடலுறவுக்கு ஆளானால், அது பரவாயில்லையா என டெல்லி உயர் நீதிமன்றம் பெண்ணுலகின் சார்பாக மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளதோடு, கிட்டத்தட்ட உலகின் 50 நாடுகள் இதுபோன்ற பாலியல் வன்கொடுமையை குற்றமாகப் பார்க்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.

தவிர,``பாலியல் உறவில் கணவன் மனைவி என இரு தரப்பினரின் விருப்பம் இருக்கும்வரை, அது குற்றமாகாது. மனைவி மாதவிடாயில் இருக்கையில் கணவன் உடலுறவுகொள்ள வற்புறுத்தி, மனைவி மறுத்து, இதனால் கணவன் தன் துணையிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டால் அது மிகத் தவறல்லவா? திருமணமானவரோ, திருமணமாகாதவரோ பாலின விருப்பத்துக்கான பெண்களின் உரிமையில் சமரசம் செய்ய முடியாது. தவிர, தம்பதியர் இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது என்று அரசால் கட்டளையிட முடியாது" என்றிருக்கிறது உயர் நீதிமன்றம்.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash

இந்திய பாலியல் வன்முறை சட்டத்தின் கீழ் கணவர்களுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கை ரத்து செய்யக்கோரி பெண்கள் அமைப்புகள் மனுத்தாக்கல் செய்துள்ளன. ஆண்கள் உரிமை அமைப்புகள் சில இதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.