Published:Updated:

2k kids: என்னங்க சார் உங்க சட்டம்?!

என்னங்க சார் உங்க சட்டம்?!
பிரீமியம் ஸ்டோரி
என்னங்க சார் உங்க சட்டம்?!

- க. கிருபா கணேஷ்

2k kids: என்னங்க சார் உங்க சட்டம்?!

- க. கிருபா கணேஷ்

Published:Updated:
என்னங்க சார் உங்க சட்டம்?!
பிரீமியம் ஸ்டோரி
என்னங்க சார் உங்க சட்டம்?!
சட்டங்கள் என்றாலே கடுமையாகவும் கண்டிப்புடனும் இருக்கும் என்றுதானே நினைப்போம்... உலகில் பல நாடுகளின் சட்டங்களும் தடைகளும், வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் உள்ளன. அவற்றைப் பார்ப்போமா..?!
2k kids: என்னங்க சார் உங்க சட்டம்?!

`சில்லறை’ சட்டம்!

‘கனடாவா மிகவும் வளர்ந்த நாடு. அமெரிக்காவின் அண்டை நாடு’ என்றெல்லாம் அந்நாட்டைப் பற்றி அறிந்திருப்போம். கனடாவில், நீங்கள் பணம் செலுத்தும் கவுன்டர்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சில்லறை களைச் செலுத்தினால், அது குற்றம். அந்தக் குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் சில்லறைகளாகப் பணம் செலுத்துவது கட்டாயம்.

சில்லறை இல்லைனு மிட்டாய் கொடுக்குற கடைக்காரங்களுக்கு எல்லாம் ஏதாச்சும் சட்டத்தைப் போடுங்கப்பா!

2k kids: என்னங்க சார் உங்க சட்டம்?!

இடுப்புச் சுற்றளவு என்ன?

உடற்பருமன் பிரச்னை, ஜப்பான் மக்களின் ஆரோக்கியத்தைக் குலைப்பதைக் கருத்தில்கொண்டு, 2008-ம் ஆண்டு அந்த அரசு ‘மெட்டபோ' (Metabo) சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, ஜப்பானில் நிறுவனங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் 45-75-க்கு இடைப்பட்ட வயதிலிருக்கும் குடிமக்களின் இடுப்புச் சுற்றளவை (Waistline), அவர்களின் ஆண்டு மருத்துவப் பரிசோதனையின் ஓர் அங்கமாக அளவிட வேண்டும். அந்த அளவு ஆண்களுக்கு 33.5 இன்ச்கள் மற்றும் பெண்களுக்கு 35.4 இன்ச்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நல்லவேள நாம ஜப்பான்ல பொறக்கல!

2k kids: என்னங்க சார் உங்க சட்டம்?!

துணி காயப்போடுறீங்களா... இதோ போலீஸ் வருது!

டிரினிடாட் - டொபேகோ (Trinidad & Tobago)... இந்தக் கரீபிய நாடு, வெனிசுலாவுக்கு அருகில் இருக்கும் இரட்டைத் தீவு. இங்கு துணிகளை வீட்டுக்கு வெளியே, அதாவது தெருவில் காயவைத்தால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 200 டாலர் அபராதத்திலிருந்து அதிகபட்சமாக ஒரு மாத கால சிறைத்தண்டனையும் கிடைக்க நேரிடும்.

ஆத்தாடி!

2k kids: என்னங்க சார் உங்க சட்டம்?!

இது சிங்கப்பூர் தடா!

சிங்கப்பூரில் சூயிங்கம்முக்குக்கு தடை உள்ளது. மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே அதை வாங்க முடியும். சூயிங்கம் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு அங்கு தடையுள்ளது. ‘அட இதுக்கு ஏன் தடை விதிச்சாங்க’ என்கிறீர்களா... சூயிங்கம்மை மென்ற பிறகு, ரயில்களின் தானியங்கிக் கதவுகளில் ஒட்டிச்செல்வதை சிலர் வழக்கமாக வைத்திருந்தனர். இது, அக்கதவின் செயல் திறனில் சிக்கலை ஏற்படுத்தியது. அதைச் சுத்தம் செய்வ தற்கு, தனியாக செலவு செய்ய வேண்டியிருந்தது. இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட, அந்நாட்டு அரசாங்கம் சூயிங்கம் முக்குத் தடை விதித்தது.

சிங்கப்பூர் அரசுக்கு ஜே!

குறி சொன்னா கூண்டோடு கைலாசம்!

குறிசொல்வதில் சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலர் அதற்கு எதிராக இருக்கலாம். வல்லரசான அமெரிக்காவில் உள்ள மேரிலேண்டில் (Maryland) குறிசொல்வது (Fortune Telling) தடைசெய்யப்பட்டது. இச்சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் 500 டாலர் அபராதம் முதல் அதிகபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனை வரை விதிக்கப்பட்டது. பின்னர் 2013-ம் வருடம் அந்தத் தடை நீக்கப்பட்டது.

ஸீபூம்பாம்!

2k kids: என்னங்க சார் உங்க சட்டம்?!

காற்று பிரிந்தால்..!

பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்ற சட்டம் பல நாடுகளில் உள்ளது. ஆனால், பொது இடங்களில் நமது உடலில் இருந்து காற்று பிரிவது (Fart) தடை செய்யப்பட்ட ஒன்று என்கிறது, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலவி நாட்டில் 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சட்டம். பெரும் பேசுபொருளான இந்தச் சட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘காற்று பிரிவது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனடியாகக் கழிவறைக்குச் செல்லுங்கள்’ என்றார்கள் அதிகாரிகள் கூலாக.

என்னங்க சார் உங்க சட்டம்?!