Published:Updated:

திஷா ரவி ஜாமீன்: `தீங்கற்ற டூல் கிட்டின் எடிட்டராக இருப்பது குற்றமாகாது!’ - நீதிமன்றம் சொன்னது என்ன?

திஷா ரவி

டூல் கிட் விவகாரத்தில் திஷா ரவி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

திஷா ரவி ஜாமீன்: `தீங்கற்ற டூல் கிட்டின் எடிட்டராக இருப்பது குற்றமாகாது!’ - நீதிமன்றம் சொன்னது என்ன?

டூல் கிட் விவகாரத்தில் திஷா ரவி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
திஷா ரவி

டூல் கிட் வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. `ஒரு வாடஸ்அப் குழுவை உருவாக்குவது அல்லது டூல் கிட் ஆவணத்தின் ஆசிரியராக இருப்பது குற்றத்துக்குரியது அல்ல’ என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திஷா ரவி
திஷா ரவி

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்னர், பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயதான கல்லூரி மாணவி, கிரெட்டா தன்பர்க்கின் வாசகங்களை ஒரு போராட்டக்குழு சார்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர், போராட்டங்கள் நடத்தும்போதும், அதில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் வெளியிடப்படும் ஆவணமான 'டூல் கிட்' உருவாக்கி, ட்விட்டரில் பகிர்ந்த குற்றத்துக்காக திஷா ரவியைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிப்ரவரி 4-ம் தேதி`டூல் கிட்’ உருவாக்கியவர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு பதிவு செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில், இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, திஷா ரவி தரப்பில் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செவ்வாய்க்கிழமை காலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

திஷா ரவி
திஷா ரவி

திஷா ரவி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி தர்மேந்திர ராணா, திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். திஷா ரவி ஒரு லட்ச ரூபாய் வைப்புத் தொகை செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, இரு நபர் ஜாமீனில் அவரை விடுவித்தார்.

டூல் கிட் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியதோடு, அதற்கான காரணங்களையும் நீதிபதி உத்தரவில் தெரிவித்திருக்கிறார். ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து சிறை நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் திகார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திஷாவின் ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டிருப்பது என்ன?

நீதிபதி தர்மேந்தர் ராணா, ``மிகக் குறைவான ஆதாரங்களைக் கருத்தில்கொண்டு, எந்தவொரு குற்றவியல் பின்னணியும் இல்லாத இளம்பெண்ணுக்கு ஜாமீன் மறுக்க எந்தவொரு தெளிவான காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. திஷா ரவிக்கும், தடைசெய்யப்பட்ட சீக்கியர்களுக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இருப்பதாக ஆதாரங்களுடன் பதிவு செய்யப்படவில்லை. வாட்ஸ்அப் குழுவை உருவாக்குவது அல்லது தீங்கற்ற டூல் கிட் ஆவணத்தின் எடிட்டராக இருப்பது ஒன்றும் குற்றமில்லை" என்று உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

திஷா ரவி
திஷா ரவி

மேலும், ``எந்தவொரு பிரிவினைவாத கருத்துகளைக்கொண்ட அமைப்புகளுக்கும் திஷா ரவி சந்தா செலுத்தியதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. குடிமக்கள், அரசுக் கொள்கைகளுடன் உடன்படவில்லை என்பதாலேயே, அவர்களைச் சிறையில் அடைக்க முடியாது. டூல் கிட்டை ஆராய்ந்ததில், வன்முறைக்கான எந்தவோர் அழைப்பும் வெளிப்படையாக இல்லை. கருத்து உரிமை அரசியலமைப்பின் 19-வது பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பேச்சு, கருத்துச் சுதந்திரம் உலகளாவிய பார்வையாளர்களைத் தேடும் உரிமையை உள்ளடக்கியது.

தகவல் தொடர்புக்குத் தடைகள் எதுவும் இல்லை. தகவல் தொடர்பு வழங்குவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வழிகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை உரிமைகள் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கிறது. டூல் கிட் மற்றும் பி.ஜே.எஃப் அமைப்புடனான திஷாவை இணைக்கும் ஆதாரங்களை அழிக்க வாட்ஸ்அப் பரிமாற்றங்களை நீக்குவது அர்த்தமற்றது. திஷா, சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க்குக்கு அனுப்பியதை சுட்டிக்காட்டியதைத் தவிர, அவர் உலகளாவிய பார்வையாளர்களிடம் `பிரிவினைவாதத்தை' ஏற்படுத்த முயன்றார் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டனர்.

மேலும், இந்த விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் நான் அறிவேன். இருப்பினும், இதுவரை சேகரிக்கப்பட்ட பொருள்களின் வலிமையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட திஷா ரவி கைது, யூகத்தின் அடிப்படையில் இருக்கிறது. அனுமானங்களின் அடிப்படையில் சதித் திட்டத்தை நிரூபிக்க முடியாது.

2021, ஜனவரி 26 அன்று நடந்த வன்முறையைத் தூண்ட திஷா, மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதன் கூட்டாளிகளின் தரப்பில் எந்தவோர் அழைப்போ, தூண்டுதலோ, அறிவுறுத்தலோ இருந்ததாகக் கூற எந்த ஒரு பதிவு ஆதாரமும் இல்லை. ஜனவரி 26 அன்று பி.ஜே.எஃப் நிறுவனர்களுடன் வன்முறையை ஏற்படுத்துவதற்கான பொதுவான நோக்கத்தை திஷா ரவி ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பகிர்ந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பிரிவினைவாதப் போக்குகள் அல்லது ஜனவரி 26 அன்று ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை யூகத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism