Published:Updated:

`பெண்ணிடம் பிறந்த வீட்டில் பணம் கேட்கச் சொல்வதும் வரதட்சணையே!' - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
News
உச்ச நீதிமன்றம்

``வீடு கட்டுவதற்காக அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கேட்ட பணத்தை `வரதட்சணை' என்று விசாரணை நீதிமன்றம் சரியாக விளக்கியுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். உயிரிழந்த பெண் தன் அம்மா மற்றும் மாமாவிடம் பணம் கேட்க அழுத்தம் கொடுக்கப்பட்ட சான்றுகளை விசாரணை நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது."

``ஒரு பெண்ணை முன்னிறுத்திக் கேட்கப்படும் சொத்து உள்ளிட்ட எந்த மதிப்புமிக்க பொருள்களுமே வரதட்சணையின் கீழே வரும். சொத்து, பணம், வீடு கட்ட தொகை கேட்பது என இவை உள்ளிட்ட அனைத்து நிதி தொடர்பான விஷயங்களும் அதில் அடங்கும். எனவே `வரதட்சணை' என்ற வார்த்தைக்கு விரிவான சட்ட விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு வரதட்சணை வழக்கு ஒன்றின் தீர்ப்பில், சமூகக் கொடுமையான வரதட்சணையை வேரோடு பிடுங்கும் வகையில் அதற்கு எதிரான சட்டப்பிரிவில் விளக்கம் தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (பி)-ன் கீழ் வழக்குகளைக் கையாளும்போது, வரதட்சணைக் கோரிக்கைகள் என்ற கொடூரமான குற்றத்தைத் தடுக்கும் வகையில், அவ்வழக்குகளில் நீதிமன்றத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும்'' என்று நீதிபதி கோஹ்லி, அந்த அமர்வுக்கான தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், வரதட்சணையால் உயிரிழந்த பெண்ணின் வழக்கு ஒன்றில், ``அந்தப் பெண்ணேதான் தன் பெற்றோரிடமிருந்து வீடு கட்டப் பணம் கேட்டுப் பெற்றிருக் கிறார், இதை வரதட்சணையாகக் கருத முடியாது" என்று கூறி, அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை விடுதலை செய்திருந்தது. அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, வரதட்சணை குறித்து மேற்சொன்ன விளக்கத்தை அறிவுறுத்தியுள்ளது.

ஐந்து மாத கர்ப்பிணியான அந்தப் பெண், தனது புகுந்த வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பெண் குறித்து பேசிய நீதிபதிகள், ``தன் குடும்பத்தினரிடமிருந்து பணம் பெற்று வர அவர் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார். உயிரிழந்த அந்தப் பெண், தன் பெற்றோரிடம் தன் புகுந்த வீட்டின் நிர்ப்பந்தத்தால்தான் பணம் கேட்டார் என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்ளத் தவறக் கூடாது" என்று குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும், அவ்வழக்கில், வரதட்சணைக் கொலைக்கு காரணமான இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

``வீடு கட்டுவதற்காக அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கேட்ட பணத்தை `வரதட்சணை' என்று விசாரணை நீதிமன்றம் சரியாக விளக்கியுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். உயிரிழந்த பெண் தன் அம்மா மற்றும் மாமாவிடம் பணம் கேட்க அழுத்தம் கொடுக்கப்பட்ட சான்றுகளை விசாரணை நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது.

Suicide (Representational Image)
Suicide (Representational Image)

உயிரிழந்தவர் முற்றிலும் உதவியற்ற நிலையில் இருந்திருக்கிறார்'' என்று கூறிய நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ததை ஏற்கவில்லை. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-பி மற்றும் பிரிவு 498-ன் கீழ் கணவர் மற்றும் அவரின் தந்தை இருவரும் குற்றவாளிகள் என்று கூறி, அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளது. இது பிரிவு 304- கீழ் ஒரு குற்றத்துக்குப் பரிந்துரைக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை.

``திருமணமான ஏழு வருடங்களுக்குள் சம்பந்தப்பட்ட பெண் தன் புகுந்த வீட்டில் உயிரிழந்திருக்கிறார். மேலும், தீக்காயம் காரணமாக அசாதாரண சூழ்நிலையில் மரணம் நிகழ்ந்தது. அதுவும் அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ​​அவர் கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிரிழக்கும் முன் கணவர் வீட்டினர் செய்த துன்புறுத்தல் வரதட்சணைக் கோரிக்கையுடன் தொடர்புடையது" என்று நீதிமன்றம் விளக்கியுள்ளது.