தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழக முதலமைச்சர் உட்பட அமைச்சர் பெருமக்கள் பலரும் கலந்துகொள்ளாததே பெரும்சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், குஜராத்திலிருந்து ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள் மீட்டுவரப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு வாதங்களை சரியாக முன்வைக்கவில்லை என்று புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது.

பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் பட்டத்து இளவரசியான லோக மாதேவி சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயின. இந்தச் சிலைகளை சாராபாய் ஃபவுண்டேஷன் மியூசியத்திலிருந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டு வந்தனர். இதையடுத்து, ‘சிலைகள் எங்களுடையவைதான்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சாராபாய் ஃபவுண்டேஷன். அந்த வழக்கில்தான், ‘தமிழக அரசு அழுத்தமான வாதங்களை முன்வைக்கவில்லை; குஜராத் மியூசியத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறது’ என்று குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

இதுதொடர்பாக, இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தியிடம் பேசினோம். ‘‘ராஜராஜ சோழன் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கொடும்பாளூர் அரசன் (பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான் தென்னவன் மூவேந்த வேளாண்) பெரியளவில் உதவி செய்ததுடன், அதன் நினைவாக 13 பஞ்சலோகச் சிலைகளைத் தயாரித்து ராஜராஜ சோழனிடம் கொடுத்திருக்கிறான். அதில் 75 செ.மீ உயரம்கொண்ட ராஜராஜ சோழன் சிலையும், 55 செ.மீ உயரம்கொண்ட லோக மாதேவி சிலையும் அடங்கும். கோயில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போயின. அவற்றின் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சிலைகள் குஜராத் மாநிலத்தில் உள்ள சாராபாய் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமான காலிகோ மியூசியத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, சிலைகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் இருந்தபோது, விசாரணை தொடங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் சாராபாய் ஃபவுண்டேஷன் மியூசியத்திலிருந்து சிலைகளை மீட்டு வந்தனர். அந்தச் சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ராஜராஜ சோழன் சிலை மற்றும் லோக மாதேவி சிலைக்கு வரவேற்பளித்தனர். அப்போது ‘இந்தச் சிலைகள் பெரிய கோயிலிலிருந்து காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் தப்ப முடியாது’ என்று போலீஸ் எச்சரித்தது.

இந்த நிலையில்தான், ‘பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் எங்களிடமிருந்து எடுத்துச் சென்ற சிலைகள் பெரிய கோயிலுக்குச் சொந்தமானவையல்ல; எங்கள் ஃபவுண்டேஷனுக்குச் சொந்த மானவை. எங்கள் மியூசியத்துக்குள் அத்துமீறி நுழைந்து அவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர். அவற்றை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று சாராபாய் ஃபவுண்டேஷன் 2019-ம் ஆண்டு டிசம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவும் சாராபாய் ஃபவுண்டேஷனுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன.

அந்தச் சிலைகள் ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள் தான் என்பதற்கும், அவை பெரிய கோயிலில் இருந்தது என்பதற்கும் பல ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன. ராஜராஜ சோழன் சிலையின் அடிப்பகுதியில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ராஜராஜ சோழனுடைய சிலையே அல்ல என்று ஃபவுண்டேஷன் தரப்பு வாதிடுகிறது. இந்த நிலையில், ‘அந்தச் சிலைகள் ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள்தான் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை’ என்று அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர். ‘சிலைகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று சாராபாய் ஃபவுண்டேஷன் சார்பில் வைக்கப்பட்ட வாதத்துக்கும் அரசுத் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

சிலைகள் அவர்களுக்குச் சொந்தமானவை என்றால், அப்போதே சாராபாய் ஃபவுண்டேஷன் நிர்வாகத்தினர் புகார் செய்திருக்கலாம். ஆனால், இந்த வழக்கில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு பணியாற்றி அந்தச் சிலைகளை மீட்டு வந்த பொன்.மாணிக்கவேல் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டப் பிறகு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தப் பின்னணிதான் சந்தேகத்தைக் கிளம்புகிறது. அதற்கேற்றாற்போல் தமிழக அரசுத் தரப்பும் அலட்சியமாக உள்ளது” என்றார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம். “சிலைகள் மீட்டெடுக்கும் பணிகளை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர்தான் கவனித்து வருகின்றனர். நீங்கள் இதுதொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான அன்புவிடம் பேசுங்கள்” என்றார்.

அன்புவிடம் பேசினோம். ‘‘அந்த ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள் இங்கு இருந்தவைதான் என்பதற்கான ஆதாரங்களாக பெரிய கோயில் பின்புறம் இருக்கும் கல்வெட்டில் உள்ள தகவல்களையும், சிலைகளின் எடை, அளவு உள்ளிட்டவற்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். அந்தச் சிலைகள் நமக்குச் சொந்தமானவை என்பதை நிரூபித்து, இங்கேயே தக்கவைக்கத்தான் நீதிமன்றத்தில் நாங்களும் போராடுகிறோம். ஆனால், சிலர் உள்நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர்’’ என்றார்.