Published:Updated:

` மணிரத்னம் வழக்கு போலத்தான் கி.ரா மீதான வழக்கும்!' - ஆச்சர்யப்படுத்திய நீதியரசர்

தலித் என்றும், அவன் என்றும் மரியாதைக் குறைவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவன், அவர் எனத் தமிழில் தனித் தனியே பிரித்தாலும் ஆங்கிலத்தில் அதற்குரிய வார்த்தை `HE’ மட்டும்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரிசல் மன்னின் வாழ்வை தனது எழுத்துகள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்தவர் தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரான இவர் தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார்.

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

கடந்த 2012-ம் ஆண்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவமரியாதைக்குரிய கருத்துகளை கூறியிருந்ததாக மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

அதனடிப்படையில் கி.ரா-வுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் கி.ரா.

குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் நோக்கம் கி.ரா-வுக்கு இருந்திருக்காது. கற்பனையாக பார்த்தால்கூட அவருக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்புகள் இல்லை. 90 வயதைக் கடந்த நாடறிந்த எழுத்தாளர் அவர்.
நீதிபதி

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், ``பேச்சு சுதந்திரத்தை மிரட்டுவதுதான் தற்போது முதல் வன்முறையாக இருக்கிறது. சமீபத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காகக்கூட ராமசந்திர குஹா, மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது முசாபர்புர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோன்றுதான் கி.ரா மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலக்கிய உலகின் மிகப்பெரிய விருதுகளைப் பெற்றிருக்கும் அவர், குறிப்பிட்ட சமூகத்தினரை தலித் என்றும், அவன் என்றும் மரியாதைக் குறைவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவன், அவர் எனத் தமிழில் தனித் தனியே பிரித்தாலும் ஆங்கிலத்தில் அதற்குரிய வார்த்தை `HE’ மட்டும்தான். மேலும் அவர், அவன் என்ற வார்த்தைகளில் அவன் என்ற சொல் மிகவும் நெருக்கத்திற்குரியதாகவே பார்க்கப்பட்டுள்ளது.

கரிசல் எழுத்தாளர்
கரிசல் எழுத்தாளர்

கடவுள்கள் மீது பற்றுகொண்ட பழந்தமிழ் புலவர்கள் பலர் கடவுளை அவன் என்றே குறிப்பிட்டு தங்களுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டியிருக்கின்றனர். திருவாசகம், பெரியபுராணம் உள்ளிட்ட பல சங்ககால இலக்கியங்களிலும் அவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதைத் தவறாகவோ அல்லது மரியாதைக் குறைவானதாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை அவமதிக்கும் நோக்கம் அவருக்கு இருந்திருக்காது என்பதுடன் கற்பனையாக பார்த்தால்கூட அவருக்கு உள்நோக்கம் இருந்திருக்காது. 90 வயதைக் கடந்த நாடறிந்த எழுத்தாளர் அவர். சமீபத்தில் தன் மனைவியை இழந்து வாதநோய் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

கி.ரா
கி.ரா

குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியக்கோரி தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களையும் இயந்திரத்தனமாக அணுக வேண்டியதில்லை. காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ இப்படியான புகார்கள் அளிக்கப்படும்போது அவற்றின் உண்மைத் தன்மை, புகாரின் நோக்கம் போன்றவற்றைப் பார்த்த பிறகே வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மேலோட்டமாகத் தாக்கல் செய்யப்படும் அப்படியான மனுக்களின் சூழ்ச்சிக்கு நீதிமன்றமும் காவல்துறையும் பலியாகிவிடக் கூடாது. அதனால் இந்த வழக்கை ரத்து செய்வதுதான் கி.ரா-வுக்கு நாம் செய்யும் அடிப்படை மரியாதையாக இருக்கும். எனவே, அவர் மீதான புகாரின் அடிப்படையிலான இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு