Published:Updated:

`கணவருக்கு ஆயுள்; மூவருக்கு தலா 10 ஆண்டுகள்!' - மனைவி தற்கொலை வழக்கில் தேனி நீதிமன்றம் அதிரடி

Theni Court
Theni Court

அஸ்மியா பானுவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியதற்காக யாசர் அராபத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருமணமான நான்காவது நாளில் மனைவி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனையும் கணவரின் தாய், அண்ணன், தங்கைக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Theni Court
Theni Court
`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி

2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவருக்கும் அதே பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஆஸ்மியா பானு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நான்காவது நாள், அஸ்மியா பானு கணவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணைக் கொடுமை காரணமாகத்தான் தன் மகள் தற்கொலை செய்துகொண்டார் என அவரது தந்தை தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆஸ்மியா பானுவின் கணவர் யாசர் அராபத், அவரின் தாயார் ராஃபியா பேகம், யாசரின் அண்ணன் ரியாஜ் அகமது, தங்கை ஜெனிஃபர் பாத்திமா ஆகியோர் மீது தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Court
Court

இந்த வழக்கானது தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி கீதா, அஸ்மியா பானுவை வரதட்சணைக் கேட்டு கொடுமை படுத்தி தற்கொலைக்குத் தூண்டியதற்காக யாசர் அராபத்துக்கு ஆயுள் தண்டனையும் யாசரின் தாய் ராஃபியா பேகம், அண்ணன் ரியாஸ் அகமது, தங்கை ஜெனிஃபர் பாத்திமாவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தார். மேலும், அஸ்மியா பானுவின் குடும்பத்துக்கு தமிழக அரசு உதவித்தொகையாக ரூபாய் 5 லட்சம், ஒரு மாத காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேனி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு