Published:Updated:

சட்டம் தன் கடமையை செய்யும்!

சட்டம் தன் கடமையை செய்யும்!
பிரீமியம் ஸ்டோரி
சட்டம் தன் கடமையை செய்யும்!

`எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகப் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது

சட்டம் தன் கடமையை செய்யும்!

`எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகப் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது

Published:Updated:
சட்டம் தன் கடமையை செய்யும்!
பிரீமியம் ஸ்டோரி
சட்டம் தன் கடமையை செய்யும்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளனை, அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். இதுபோலவே இந்தியாவில் பல ஆண்டுகளாக நடந்துவந்த பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சில அதிரடியான தீர்ப்புகள் இங்கே...

சட்டம் தன் கடமையை செய்யும்!

சித்துவுக்கு ஓராண்டு சிறை!

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988-ம் ஆண்டு பாட்டியாலாவில், சாலையை மறித்து காரை நிறுத்தியதுடன், அதைத் தட்டிக்கேட்ட 65 வயது முதியவர் குர்னாம் சிங்கைத் தன் நண்பருடன் சேர்ந்து தாக்கியதில், அந்த முதியவர் உயிரிழந்தார். இந்த வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நடந்துவந்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் மே 19-ம் தேதி வழங்கப்பட்டது. நவ்ஜோத் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு. சுமார் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை ஏற்ற சித்து, பஞ்சாப் பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டம் தன் கடமையை செய்யும்!

யாசின் மாலிக் குற்றவாளி!

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவரான யாசின் மாலிக், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்கியதாகவும், அதன் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றதாகவும் கூறி, கடந்த 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். இவர்மீது தீவிரவாதச் சட்டம், தீவிரவாதத்துக்கு நிதி திரட்டுதல், சதி மற்றும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுதல், உபா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதுடன், தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்நிலையில், மே 19-ம் தேதி, இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம், யாசின் மாலிக் மீதான தீவிரவாதக் குற்றங்கள் அனைத்தும் நிரூபணமானதால் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.

சட்டம் தன் கடமையை செய்யும்!

வேலுமணி மீதான டெண்டர் வழக்கு!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடான வகையில் டெண்டர் ஒதுக்கியதாகக் குற்றம்சாட்டி அவர்மீது அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை பத்து வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் எஸ்.பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மே 20-ம் தேதி, இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, ``எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகப் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது” என்று தீர்ப்பளித்து, “டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை” என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சட்டம் தன் கடமையை செய்யும்!

ஜி.எஸ்.டி தீர்ப்பு!

குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு தனியார் அமைப்பு, “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையும், பரிந்துரைகளையும் மாநில அரசுகள் கடைப்பிடித்து அமல்படுத்த வேண்டும்” என்பதை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஜி.எஸ்.டி கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை மாநில அரசுகள் செயல்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும்!” எனத் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. மே 19-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அமர்வு, “இந்தியாவில் ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. ஜி.எஸ்.டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்குச் சம உரிமை உண்டு. ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுரைகள், பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசையோ, மாநில அரசுகளையோ நிர்ப்பந்திக்க முடியாது!” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சட்டம் தன் கடமையை செய்யும்!
சட்டம் தன் கடமையை செய்யும்!

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார்!

கொரோனா ஊரடங்கின்போது பாலியல் தொழிலாளர்கள் உணவின்றிக் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு அரசின் எந்தவித அடையாளச் சான்றும் கிடைக்காததால், அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகளும் கிடைப்பதில்லை எனவும், அவர்களுக்கு ஆதார் உள்ளிட்ட அரசின் பிற அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மே 19-ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு, “தொழிலைவைத்து யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது; அவர்களும் கண்ணியத்துடன், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. தமிழ்நாட்டில் 86,000 பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கியதைப் பிற மாநிலங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்!” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism