Published:Updated:

நீதிபதிகளே, தினமும் ஒரு பாடம் கற்கிறோமா?

தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பில்....
பிரீமியம் ஸ்டோரி
தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பில்....

இன்றும் அமெரிக்காவில் நிறவெறி முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டதா என்றால், ‘இல்லை’ என்றே கூறலாம்.

நீதிபதிகளே, தினமும் ஒரு பாடம் கற்கிறோமா?

இன்றும் அமெரிக்காவில் நிறவெறி முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டதா என்றால், ‘இல்லை’ என்றே கூறலாம்.

Published:Updated:
தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பில்....
பிரீமியம் ஸ்டோரி
தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பில்....

கறுப்பினத்தைச் சேர்ந்த ப்ளாய்டு, அமெரிக்கக் காவலர் ஒருவரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. அமெரிக்க மக்கள் கொதித்தெழுந்து போராடிவருகிறார்கள். சம்பந்தப்பட்ட காவலர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டபோதும் இதை ஒரு தனிநபர் நிகழ்வாக மட்டுமே பார்ப்பதற்கு அமெரிக்கர்கள் தயாராக இல்லை. மக்கள் மட்டுமல்ல... அமெரிக்காவில் காவல்துறை, ராணுவம், நீதித்துறை ஆகியவற்றிலிருந்தும் ட்ரம்ப் அரசுக்கு எதிராக ஒருமித்த குரல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐக்கிய அமெரிக்க நாட்டில் அரசமைப்பு சட்டம் 1781-ம் வருடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் முதல்வரியிலேயே ‘அனைத்து ஆண்களும் சமம்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும், சட்டம் நிறுவப்பட்டதிலிருந்து கறுப்பின மக்களுக்கு சம உரிமை வழங்கப்படவில்லை. பெண்களுக்கும் வாக்குரிமை இல்லை. பிற்காலங்களில் அவை படிப்படியாக வழங்கப்பட்டன. கறுப்பின மக்களுக்கு சமூக, பொருளாதார சுதந்திரம் கிட்டியதுடன், பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

கே.சந்துரு, 
மேனாள் நீதிபதி, 
சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

இருப்பினும், இன்றும் அமெரிக்காவில் நிறவெறி முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டதா என்றால், ‘இல்லை’ என்றே கூறலாம். பொருளாதாரரீதியிலும், சமூகரீதியிலும் வெள்ளையர் அல்லாத மக்களுக்கு எதிரான பல வேறுபாடுகள் அங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. `உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு’, `இதர நாடுகள் சுதந்திரம் பெறுவதற்கான ஈர்ப்பு சக்திகளை உருவாக்கிய நாடு’ என்று பெயர் பெற்றிருப்பினும், நிலைமை அதற்கு நேர்மாறாகத் தான் உள்ளது.

அதற்காகத்தான் அமெரிக்க மக்கள் இப்போது எதிர்வினை யாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கிழக்கிலிருந்து மேற்குக் கடற்கரை வரை தினசரி மாபெரும் கண்டனப் பேரணிகள் நடக்கின்றன. வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட மக்களின் கோபக்கனலை எதிர்கொள்ள முடியாமல் குடியரசுத் தலைவர் ட்ரம்ப் பதுங்குகுழியில் ஒளிந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனாலும், ‘மாநில ஆளுநர்களும், பகுதிவாரியான ஷெரீப்புகளும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், ராணுவத்தை வைத்து ஒரே நாளில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவேன்’ என்று மிரட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்குப் பின்னர் நடந்தவைதான் விந்தையிலும் விந்தை. ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைமை அதிகாரி ட்ரம்பைப் பார்த்து, ‘வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்’ என்று தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். ராணுவத் தளபதி ஒருவர், தனது படையினருக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதினார். அதில், ‘அரசியல்வாதிகள் என்ன கூறுகிறார்கள் என்று நமக்குக் கவலை இல்லை. ஆனால், அரசமைப்பு சட்டத்தைத் தூக்கிப் பிடிப்பதுதான் நமது கடமை’ என்று அரசமைப்பு சட்டத்தை நினைவூட்டினார்.

தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பில்....
தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பில்....

அதற்கும் ஒருபடி மேலே சென்று, வாஷிங்டன் மாநில சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவரும் கையெழுத்திட்டு, ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘அமெரிக்காவில் போராட்டம் நடத்தும் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அரசமைப்பு சட்டம் அளித்துள்ள சம உரிமை நடைமுறையில் இல்லா துடன், இனவெறி இன்னும் தாண்டவமாடுகிறது. நாங்களும் பல சமயங்களில் மறைமுகமாக நிற வேறுபாடுகளை நிலைநிறுத்தி வந்தமைக்கு வெட்கப்படுகிறோம். அமெரிக்க மக்களுக்கு உண்மையான நீதி வழங்க சபதம் எடுத்துக் கொள்கிறோம்’ என்று எழுதியிருந்தார்கள்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் இந்த வெளிப் படையான நடவடிக்கை, உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. `நீதிமன்றத்தி லிருந்து சட்டப்படி நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் இப்படிப் பொது அறிக்கையை வெளியிடலாமா?’ என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்தச் சமயத்தில் இந்தியாவின் நீதித்துறை நிலைமை என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.

1975-77 நெருக்கடிநிலை காலகட்டத்தில், மத்தியப்பிரதேச அரசுக்கு எதிரான ஒரு வழக்கில், ‘பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுக முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளி யானது. பிறகு, ‘இந்தத் தீர்ப்பு தவறானது; அதற்காக நாங்கள் பொதுவில் மன்னிப்பு கேட்கிறோம்’ என்று ஒரு நீதிபதி கூறியிருந்தார். பின்னர், `இந்தத் தீர்ப்பின் அடிப்படை தவறு’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2019-ம் வருடம் நான்கு நீதிபதிகள் பத்திரிகை யாளர்களுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி, அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். முக்கியமான வழக்கு களெல்லாம் சில குறிப்பிட்ட நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதன் மூலம் அவற்றின் தீர்ப்புகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும், `வழக்கு பட்டியல் ஒதுக்கீட்டில் ஒளிவு மறைவற்ற செயல்பாடு தேவை’ என்றும் கூறினர். பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னணி வகித்த நீதிபதி ரஞ்சன் கோகோய், பின்னர் தலைமை நீதிபதி ஆன பிறகும் அதைவிட மோசமான நடைமுறைகளே கடைப் பிடிக்கப்பட்டன. அவர் மீது கூறப்பட்ட பாலியல் சீண்டல் புகாரை அவரே விசாரிக்க முற்பட்டதுடன், ஓய்வு பெற்ற பிறகு மத்திய ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நாடாளுமன்ற மேலவைக்கு உறுப்பின ராகவும் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றில், நீதிபதிகள் எப்போதுமே மக்கள் பிரச்னை எதுவாக இருப்பினும் பகிரங்கமாக மக்களுக்கு உணர்வூட்டும் வகையில் எவ்வித அறிக்கைகளையோ, கருத்துகளையோ வெளியிட்டதில்லை. இந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் கடுமையான ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதையே உண்மை என்று பதிவுசெய்து, பொதுநல வழக்கு களைத் தள்ளுபடி செய்யும் போக்கைக் காண முடிகிறது.

நீதிபதிகளே, தினமும் ஒரு பாடம் கற்கிறோமா?

சில உயர் நீதிமன்றங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதிலுள்ள தடைகளைக் களைய முற்பட்டன. ஆனாலும், உச்ச நீதிமன்றம் அந்தப் பிரச்னைகளை தங்களால் தீர்க்க முடியாது என்று வழக்குகளைத் தள்ளுபடி செய்தது. பிறகு இந்தியா முழுவதும் கண்டனக் கணைகள் பெருகியவுடன், மீண்டும் ஒரு பொதுநல வழக்கில் சில உத்தரவுகளை வழங்க முற்பட்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகவே நீதிமன்றங்கள் முடங்கியுள்ளன. காணொளிக் காட்சிகள் மூலம் சில அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படுகின்றன.

‘முறையாக நீதிமன்றங்கள் நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் குரல் எழுப்பியும் பலன் இல்லை. தொற்றுநோய் காலத்துக்கு முன்னர் தொடுக்கப்பட்ட பல முக்கியமான வழக்குகளை விசாரிப்பதற்குத் தயக்கம் காட்டுகிறது உச்ச நீதிமன்றம். காஷ்மீர் பிரிவினை, குடியுரிமை திருத்த மசோதா... இப்படிப் பல முக்கியமான அரசமைப்பு சட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முன் இருக்கின்றன. அவற்றின் விசாரணைகள் தள்ளிப்போவதன் மூலம், பிரச்னைகளே நீர்த்துப்போகும் என்பதுதான் நிதர்சனம். தொற்றுநோய்ப் பேரிடர் மக்களுக்கு அதீத துன்பங்களை அளித்துவரும் வேளையில் நீதிமன்றங்களும் முடங்கிவிட்டது கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மயில் இறகால் நீவிவிடவில்லையென்றாலும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கவாவது நீதிபதிகள் முயலலாம்.

வாஷிங்டன் மாநில சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் செய்ததைப் போன்ற ஒரு நிகழ்வு இந்தியாவில் நடக்கவே முடியாது என்று தோன்றுகிறது.

2016-ம் ஆண்டு குவாலியர் மாவட்ட நீதிபதியின் பாலியல் வழக்கை விசாரிக்கும்போது அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹார் தனது தீர்ப்பில், ‘தினந்தோறும் பாடம் ஒன்றை நாங்கள் எங்களது விசாரணையில் கற்றுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகள் நீதிபதியின் தன்னடக்கத்தை வெளிப்படுத்தி னாலும், உண்மையிலேயே உலகம் முழுவதும் நடைபெறும் வெளிப்பாடுகளிலிருந்து இந்திய நீதிபதிகள் பாடம் எதையும் கற்றதாகத் தெரியவில்லை.

`தினந்தோறும் பாடம் எவற்றையாவது கற்றுக்கொள்கிறோமா...’ என்று சிந்திப்பது நலம் பயக்கும். நம் நீதிபதிகள் செய்வார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism