Published:Updated:

மரணப் படுக்கையில் போராடிய தந்தை; உயிர்காக்க கல்லீரல் தானத்துக்கு முன்வந்த சிறுவன்! - இறுதியில் சோகம்

கல்லீரலை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய சிறுவன்

சிறுவன் ஒருவன், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய தந்தைக்கு, தன்னுடைய கல்லீரலை தானம் செய்ய சட்டப் போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்திருக்கிறது.

மரணப் படுக்கையில் போராடிய தந்தை; உயிர்காக்க கல்லீரல் தானத்துக்கு முன்வந்த சிறுவன்! - இறுதியில் சோகம்

சிறுவன் ஒருவன், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய தந்தைக்கு, தன்னுடைய கல்லீரலை தானம் செய்ய சட்டப் போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்திருக்கிறது.

Published:Updated:
கல்லீரலை தானம் செய்ய நீதிமன்றத்தை நாடிய சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் தந்தைக்கு, தன்னுடய கல்லீரலை தானம் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய சம்பவம் அனைவரின் கவனத்தைப் பெற்றது. கடந்த 6-ம் தேதியன்று, கல்லீரலை தானம் செய்ய நோயாளியின் மகனை அனுமதிக்க வேண்டி, உத்தரப்பிரதேச சுகாதார செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கல்லீரல் தானம் செய்ய விரும்பிய சிறுவன் மைனர் என்ற காரணத்தினாலே, உறுப்பு தானம் செய்யமுடியுமா என்ற கேள்வி எழுந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இது தொடர்பாக அந்த சிறுவன், வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்திருக்கிறார். அந்த சிறுவன் தாக்கல்செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஆர்.பட், பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுவனின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ``சிறுவனின் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரின் உயிரைக்காப்பற்ற வேண்டுமெனில் உறுப்பு தானம் செய்வதே ஒரே வழி" என்று தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

அதையடுத்து உத்தரப்பிரதேச அரசிடம் பதில் கேட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், `` சட்டத்தின் அடிப்படையில், உறுப்பு தானம் செய்பவர் பெரியவராக இருக்க வேண்டும். இருப்பினும் இந்த மனு நேற்று (செப்டம்பர் 8) தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே அவசரத்தைக் கருத்தில் கொண்டு, 12-ம் தேதி இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, உத்தரப்பிரதேச சுகாதாரத் துறையின் பொறுப்பான அதிகாரியொருவர் உடனிருக்கவேண்டும். இதற்கிடையில் சிறிய வயது மனுதாரரால், உறுப்பு தானம் செய்வது சாத்தியமா என்பது குறித்த சோதனைகளை மேற்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்பா
அப்பா

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 5 முதல் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியான சிறுவனின் தந்தை கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 10) உயிரிழந்து விட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தன் தந்தைக்காக பெரும் சட்டப் போராட்டம் நடத்திய சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.