Published:Updated:

`பாலிவுட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி!’- கங்கனா மீது வழக்கு; நீதிமன்றம் உத்தரவு

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் ( sentinelassam )

அவர்கள் இருவர் மீதும் பகைமையை ஊக்குவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகச் செயல்படுதல், தேச துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

பாலிவுட் சினிமாவையும், பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் குறித்தும் அவதூறு பரப்பும் விதமாக ட்விட்டரில் பிரசாரம் செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அவரது சகோதரி ரங்கோலி சான்டெல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள மும்பை பெருநகர பந்தரா மேஜிஸ்திரேட் உத்திரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, ட்விட்டரில் பாலிவுட் குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அவரது கருத்துகளுக்கு ஒருபுறம் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தாலும், ஆங்காங்கே ஆதரவுக் குரல்களும் எழுந்துவருகின்றன.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இந்தநிலையில், பாலிவுட்டைச் சேர்ந்த ஷாஹில் அஷ்ரப் அலி என்பவர் கங்கனா, அவரது சகோதரி ரங்கோலி சான்டெல் ஆகியோருக்கு எதிராக மும்பை பந்தரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ``நடிகை கங்கனா ரணாவத், பாலிவுட் திரையுலகை சமூக வலைதளங்கள் மூலமாகவும், தான் பங்கேற்கும் நேர்காணல் மூலமாகவும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, பாலிவுட் திரையுலகம் நெப்போடிஸத்தின் மையமாக மாறிவிட்டதாகவும், சுயநலவாதிகளின் கூடாராமாகிவிட்டதாகவும் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்து வருகிறார் கங்கணா. இந்தப் பதிவுகளின் மூலம் பிளவுபடுத்தும் மனநிலையை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறார். இதன்மூலம் பாலிவுட் சினிமா உலகில் பிரிவினையை ஏற்படுத்த கங்கனா முயற்சிக்கிறார்.

மேலும், கங்கனாவும் அவரது சகோதரியான ரங்கோலி சான்டெலும், தங்களது சமூக வலைதளப் பதிவுகளின் மூலம் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

`சிவசேனா, சோனியா சேனாவாக மாறிவிட்டது!’ - கொதித்த கங்கனா ரணாவத்

இந்த வழக்கு மும்பை பெருநகர பந்தரா நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெய்தேவ் குலே முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இது முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. அவர்கள் இருவர் மீதும் பகைமையை ஊக்குவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகச் செயல்படுதல், தேச துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு