Published:Updated:

`கணவன், மனைவியாக வாழ முடிவு; தலையிட மூன்றாம் நபருக்கு உரிமை இல்லை!' - டெல்லி உயர்நீதிமன்றம்

Marriage (Representational Image)

ஆண் - பெண் இருவரும் வயது உரியவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ முடிவெடுத்தால், குடும்ப உறுப்பினர்கள் உட்பட மூன்றாவது நபர்கள் அதில் தலையிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

`கணவன், மனைவியாக வாழ முடிவு; தலையிட மூன்றாம் நபருக்கு உரிமை இல்லை!' - டெல்லி உயர்நீதிமன்றம்

ஆண் - பெண் இருவரும் வயது உரியவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ முடிவெடுத்தால், குடும்ப உறுப்பினர்கள் உட்பட மூன்றாவது நபர்கள் அதில் தலையிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
Marriage (Representational Image)

பிள்ளைகள் தாமாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் திருமணங்களைப் பல பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மதம், இனம், சாதி என ஏதோ ஒன்றைச் சொல்லி பிரிக்க நினைப்பதுண்டு.

மேலும், பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராகத் திருமணம் செய்துகொள்ளும் பிள்ளைகள், அதே வசிப்பிடத்திலும் வாழ முடியாது. தங்கள் குடும்பத்தின் மீதுள்ள பயத்தால், நாடோடியாக சுற்றித் திரிபவர்கள் பலர்.

Love marriage (Representational image)
Love marriage (Representational image)
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி, பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதி, குடும்பத்தின் மீதுள்ள பயத்தால் ஹோட்டல் மற்றும் பிற பகுதிகளில் வசித்து வருவதாகவும், நிம்மதி இல்லாமல் அலைவதாகவும் நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ஏற்கெனவே பெற்றோர்களும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் துன்புறுத்தி சித்ரவதை செய்ததால் வீட்டைவிட்டு வெளியேறினேன். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த என் தந்தை அரசியலோடு தொடர்புடையவர் என்பதால் எங்களை எளிதாக காயப்படுத்த முடியும்’ என, சம்பந்தப்பட்ட பெண் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி கெடேலா, ``அவசரம் அல்லது அச்சுறுத்தலின்போது மனுதாரரிடம் இருந்து அழைப்பு வரும்பட்சத்தில், டெல்லி காவல்துறை அதிகாரிகள் உடனே பதிலளிக்க வேண்டும். மனுதாரரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அடுத்து வரும் மூன்று வாரங்களில், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அவர்கள் வீட்டை சென்று பார்வையிட வேண்டும்.

திருமணமான தம்பதியை அவர்களின் சாதி அல்லது சமூகத்தை பொருட்படுத்தாமல் பாதுகாக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள அரசுக்கு உரிமை உண்டு.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Tingey Injury Law Firm on Unsplash

ஆண் - பெண் இருவரும், உரிய வயது உடையவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்தால், குடும்ப உறுப்பினர்கள் உட்பட மூன்றாவது நபர்கள் தலையிட முடியாது. நமது அரசியலமைப்பு சட்டமும் அதை உறுதி செய்கிறது.

நாட்டு மக்களுக்குத் தீங்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அரசு இயந்திரத்தின் கடமை. அதுமட்டுமல்லாமல் தீங்கு ஏற்படும் என அஞ்சும் மக்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு’’ என்று கூறினார்.