‘ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அலுவலகத்தின் தாமதமான செயல்பாடுகளால், விடுதலையை நோக்கி வழக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது’ என்று உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர் பேரறிவாளன் தரப்பினர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் 29 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின்மீது, இரண்டு ஆண்டுகளாகியும் ஆளுநர் பன்வாரிலால் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில், பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் கோரி அற்புதம்மாள் கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணையின்போது, ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். `எம்.டி.எம்.ஏ எனப்படும் பன்னோக்கு விசாரணை முகமையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது’ என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எம்.டி.எம்.ஏ அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் என்ன தொடர்பு? ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 41 எதிரிகள்மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 12 பேர் இறந்துபோன எதிரிகளாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரில் ஏ1, ஏ2, ஏ3 எனக் குறிப்பிடப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மன், அகிலா ஆகியோரின் பெயர்களை 09.12.1992 அன்று தனியாகப் பிரித்து வழக்கு எண் 11/92 எனத் தனி வழக்காக சி.பி.ஐ பதிவு செய்தது.

மீதமுள்ள நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேரைப் பிரித்து வழக்கு எண் 3/92 எனத் தனி வழக்காக சி.பி.ஐ பதிவு செய்தது. ஏ1, ஏ2, ஏ3 ஆகியோரின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த வழக்கு எண் 11/92 என்ற வழக்கில்தான் ஜெயின் கமிஷன் விசாரணை முடிவின்படி அமைக்கப்பட்ட எம்.டி.எம்.ஏ மற்றும் சி.பி.ஐ தங்களது விசாரணையை மேற்கொள்ள தடா நீதிமன்றத்தில் 17.06.1999-ல் அனுமதி பெறப்பட்டது.

அதன்படி, மேற்கண்ட இரு அமைப்புகளும் 1999-ம் ஆண்டு முதல் சீலிடப்பட்ட கவர்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விசாரணை விவரங்களை தடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவருகின்றன. இப்படி சுமார் 64-க்கும் மேற்பட்ட சீலிடப்பட்ட உறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. `ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எங்கே, யாரால் தயாரிக்கப்பட்டது என்ற எந்தப் புலனாய்வையும் சி.பி.ஐ மற்றும் எஸ்.ஐ.டி (சிறப்பு புலனாய்வுக் குழு) மேற்கொள்ளாத காரணத்தால், அது பற்றிப் புலனாய்வு செய்தாலே ஒட்டுமொத்த சதியும் தெரிய வந்துவிடும்’ என நீதிபதி ஜெயின் தனது இறுதி அறிக்கையில் கூறியிருந்தார்.

இது தனது விடுதலைக்கு உதவும் என நம்பிய பேரறிவாளன், `எம்.டி.எம்.ஏ தாக்கல் செய்த சீலிடப்பட்ட கவர்களை தடா நீதிமன்றம் பிரித்துப் பார்க்க வேண்டும். அந்த அமைப்பின் புலனாய்வையும் தடா நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்’ எனக் கோரி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ மற்றும் எம்.டி.எம்.ஏ தாக்கல் செய்த பதில் மனுவில், `பேரறிவாளனுக்கும், தற்போது நடைபெற்று வரும் எம்.டி.எம்.ஏ-வின் மேல் விசாரணைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை’ எனத் தெரிவித்திருந்தது. இதை ஏற்றுக்கொண்ட தடா நீதிமன்றம், பேரறிவாளனின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2016-ல் உச்ச நீதிமன்றத்தை நாடினார் பேரறிவாளன். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 01.05.2017 அன்று, ‘எம்.டி.எம்.ஏ மற்றும் சி.பி.ஐ அமைப்புகள் அன்றைய நாள்வரை விசாரித்த விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், பேரறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற சி.பி.ஐ மற்றும் எஸ்.ஐ.டி அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம் மற்றும் வெடிகுண்டு குறித்த புலனாய்வே நடைபெறாமை ஆகிய குளறுபடிகளைக் கண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூவர் அமர்வு, பேரறிவாளன் அளித்த அரசியல் யாப்பு உறுப்பு 161-ன்படியான மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட்டது. ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்ற நிலையில், கடந்த 05.11.2019 அன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் தனது புலனாய்வு முன்னேற்றங்களை நான்கு வாரத்தில் எம்.டி.எம்.ஏ தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி விசாரணையைத் தள்ளிவைத்தது.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `விசாரணையில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை’ என அதிருப்தியைத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், `இவர்களின் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் என்னவானது?’ எனக் கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்து அறிய தமிழக அரசு வழக்கறிஞரை ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, 11.02.2020 அன்று ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், `ஆளுநரிடம் கோப்பு நிலுவையில் உள்ளதால் தற்போது ஒன்றும் செய்ய இயலாது’ எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், `ஆளுநரிடம் கேட்டு பதில் சொல்லுங்கள்’ என்று கூறி மீண்டும் இரண்டு வாரம் அவகாசம் தந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 20, 2020 அன்று சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், `எம்.டி.எம்.ஏ-வின் இறுதி அறிக்கையைப் பெற்ற பிறகே முடிவெடுக்க முடியும்’ என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக, எம்.டி.எம்.ஏ குறித்த பேரறிவாளன் வழக்கு 11.02.2020-க்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பேரறிவாளனுக்கு பரோல் கோரி அற்புதம்மாள் கடந்த மார்ச் 24-ம் தேதி தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் அதே பதிலைதான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகுறித்து தற்போது அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

நீதியரசர்கள் தாமாகவே முன்வந்து எழுப்பும் கேள்விகளும், தமிழக அரசின் மெத்தனப் போக்குகளுமே தற்போது பேரறிவாளனின் பரோல் விடுமுறையைத் தாண்டி விடுதலைக்கான கதவுகளைத் திறந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளன.