Published:Updated:

கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 8 வயது சிறுவன்... ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்... வழக்கின் பின்னணி!

Jail (Representational Image) ( Pixabay )

பீகார் காவல் துறையினர் சிறுவனின் வயதை 13 என பதிவு செய்தனர். ஆனால் பிறப்புச் சான்றிதழின்படி, அச்சிறுவனுக்கு 8 வயது தான். கலவரம், கொலை முயற்சி, தாக்குதல், மதக் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்தல், அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 8 வயது சிறுவன்... ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்... வழக்கின் பின்னணி!

பீகார் காவல் துறையினர் சிறுவனின் வயதை 13 என பதிவு செய்தனர். ஆனால் பிறப்புச் சான்றிதழின்படி, அச்சிறுவனுக்கு 8 வயது தான். கலவரம், கொலை முயற்சி, தாக்குதல், மதக் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்தல், அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Published:Updated:
Jail (Representational Image) ( Pixabay )

பீகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில், செப்டம்பர் 8-ம் தேதி வியாழன் அன்று, மகாவீர் அகாரா பேரணி நடைபெற்றது. பர்ஹாரியா என்ற தெருவில் இஸ்லாமியர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பேரணி நுழையும்போது இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கோஷங்களை, அந்தப் பேரணியில் ஈடுப்பட்டவர்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

crime
crime

இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு கும்பலும் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், தடிகளைக் கொண்டும் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக  25 முஸ்லிம்கள் மற்றும் 10 இந்துக்கள் என மொத்தம் 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்கள் மீது கலவரம், கொலை முயற்சி, தாக்குதல், மதக் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்தல், அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துதல் என இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தோடு தொடர்புடையதாகக் கூறி 20 பேரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

கலவரத்தில் ஈடுபட்டதாக 8 வயது சிறுவனையும், அவனின் தாத்தாவான 70 வயது முதியவரையும் போலீசார் கைது செய்தனர். பீகார் காவல்துறை அதிகாரிகள், அச்சிறுவனின் வயதை 13 என பதிவு செய்திருந்தனர். ஆனால் பிறப்புச் சான்றிதழின்படி அவனுக்கு 8 வயதுதான்.

court
court

சிறுவன் காவலில் இருந்தபோது, காவலர்களிடம் கூறியதை வைத்தே அதிகாரிகள் சிறுவனின் வயதை 13 என பதிவு செய்ததாக, சிவான் மாவட்ட மாஜிஸ்திரேட் அமித் குமார் பாண்டே கூறியுள்ளார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாத்தாவிற்குச் செவ்வாய்க்கிழமையன்று ஜாமீன் வழங்கப்பட்டது. சிறுவனின் தாய் மற்றும் அத்தை, சிறுவனின் நடத்தைக்குப் பொறுப்பேற்பதாக உறுதியளித்த பின் சிறுவனுக்குப் புதன்கிழமையன்று ஜாமீன் வழங்கப்பட்டது என மைனர்களுக்கான வழக்கறிஞர் நவீன் ஸ்ரீவஸ்தவ் கூறியுள்ளார்.

``என்னுடைய தம்பி ஆறு நாள்கள் கழித்து புதன்கிழமை 6.30 மணிக்கு வீட்டிற்கு வந்தான். இன்னும் அவன் மிகவும் பயந்து காணப்படுகிறான். அவன் சரியாக இன்னும் சில நாள்கள் எடுக்கும்’’ என சிறுவனின் சகோதரன் தெரிவித்துள்ளார்.  8 வயது சிறுவனைக் கைது செய்ததற்காகக் கண்டனங்களும் குவிந்தன.