‘‘இந்தப் பையன், அந்த மைனர் பொண்ணைக் கெடுத்ததை ஊர் ஜனங்க முன்னாடி ஒப்புக்கிட்டான். அதுக்கு தண்டனையா இவனே அந்தப் பொண்ண கண்ணாலம் கட்டிக்கணும். இல்லாட்டி உத்தியோகமும் போய், களி தின்ன வேண்டிவரும். அதுவும் சுய விருப்பத்துல தாலி கட்டணும். இல்லாட்டி, நாள பின்ன நாம ஏதோ கட்டாயப்படுத்தினதா சொல்லி நம்ம தாலிய அறுப்பான்’’ - கிராமம் சார்ந்த படங்களிலும், நம் கிராமங்களிலும் என்றோ பார்த்த பஞ்சாயத்துக் காட்சிகளின் நினைவுகள் இவை. பெண் விடுதலையிலும், சமூகநீதியிலும் அதைத் தாண்டி எவ்வளவோ தூரம் வந்துவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மேற்கண்ட பஞ்சாயத்து தீர்ப்பின் அப்கிரேடடு வெர்ஷனை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே கடந்த வாரம் பேசியிருக்கிறார்.

அதே வாரத்தில் இன்னொரு வழக்கில், ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப் பட்டிருக்கிறார். அந்தரங்க இடங்களிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. தன்னை நம்பிய பெண்ணை ஏமாற்றுவதற்காக, கோயிலில் வைத்து தாலிகட்டி திருமணம் செய்துகொண்டு, கணவனாக உடன் வாழ்ந்த ஒருவனால் அந்தப் பெண்ணுக்கு இத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. திருமணமே செய்துகொள்ளவில்லை என அந்த நபர் தற்போது மறுக்க, பாலியல் வன்புணர்வு என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். வழக்கை விசாரித்த பாப்டே, ‘‘ஒருவரை வலிந்து தாக்குதல் என்பது குடும்ப வன்முறையின் கீழ்தானே வர வேண்டும்... இதை எப்படிப் பாலியல் வன்கொடுமையாக (Rape) கணக்கில்கொள்வது... திருமண பந்தத்துக்குள் ஒரு கணவன் மனைவிக்கிடையே நிகழும் தனிப்பட்ட தாம்பத்ய உறவு தொடர்பான அத்துமீறல்களை, அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், பாலியல் கொடுமை என்று சொல்ல முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நல்லவேளை... இவை தீர்ப்பின் வரிகள் இல்லை. வெறுமனே நீதிமன்ற உரையாடல்கள் என்பதுதான் இதிலிருக்கும் ஆறுதல். பல பெண்ணியச் செயற்பாட்டாளர்கள், ‘‘பாப்டேவின் பேச்சுகள் முதிர்ச்சியற்றவை. அவர் இவற்றைத் திரும்பப் பெற்று, மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ எனக் குரலெழுப்பிவருகிறார்கள். சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், ‘‘நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார் பாப்டே.

குற்றம் நடந்தபோது அந்தப் பெண் மைனர் எனத் தெரிந்தும், இப்படியானதொரு சமரசப் பேச்சுவார்த்தையை நீதிபதி முன்வைத்ததில் ஆரம்பித்து, அத்தனை அபத்தங்களையும் தூக்கிச் சுமக்கிறது நீதிமன்றம். ஒரு சிறுமிமீது நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கொன்று, சில வாரங்களுக்கு முன்னர் மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ‘‘சிறுமியின் ஆடை கழற்றப்படவில்லை. அதனால், இதை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்காகப் பதிய முடியாது’’ என்று அதிர்ச்சித் தீர்ப்பளித்தார் பெண் நீதிபதி ஒருவர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் பேச்சில், சட்டப் புத்தகங்களோடு அவர்களின் சுய கருத்துகளும் வெளிப்படலாம். ஆனால், நீதிபதி என்பவர் நீதியின்படி செயல்பட வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டப்படி, கணவன் மனைவிக்கிடையே நடக்கும் மேரிட்டல் ரேப் (Marital Rape) எனப்படுவது குற்றமில்லை. 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியைக் கட்டாய உறவுக்கு அழைப்பதும் இந்திய தண்டனைச் சட்டம் செக்ஷன் 375-படி தவறில்லை. பாலியல் வன்புணர்வால் ஓர் இந்தியப் பெண்ணுக்குப் பிரச்னை என்றாலும், அவரால் இந்திய நீதிமன்றங்கள் தண்டனையைப் பெற்றுத்தர முடியாது. திருமணத்துக்குப் பின்னர், பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளைச் சகித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையைத்தான் இந்திய நீதிமன்றங்கள் பெண்களுக்கு வழங்கியிருக்கின்றன.

2015-ம் ஆண்டு, பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஒரு பெண். இதை தண்டனைக் குற்றமாக அறிவிக்க வேண்டும் என அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது, ‘‘திருமணத்துக்குப் பிறகான பாலியல் உறவை தண்டனைக் குற்றமாக மாற்றினால், அது இந்திய சமூகக் கட்டமைப்பை பாதிக்கும்’’ என்று கருத்து தெரிவித்து அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மீண்டும் வழக்கறிஞர் அனுஜா குமார் 2019-ம் ஆண்டு பொதுநல வழக்காக இதே பிரச்னையை மையப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என்று அப்போது தட்டிக்கழித்தவரும் பாப்டேதான்.

‘திருமணத்தை, பாலியல் கொடுமை களுக்கான அனுமதியாகப் பயன்படுத்தக் கூடாது’ என்கிறது 2013-ல் சமர்ப்பிக்கப்பட்ட வர்மா குழு ஆய்வறிக்கை. ஆனால், அதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையும், ‘‘இந்தியா இதை தண்டனைக் குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்’’ என ஆலோசனை வழங்கியிருக்கிறது. எத்தனையோ நாடுகள் இதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துவிட்டன. ஆனால், இந்தியா உள்ளிட்ட 36 நாடுகள் இன்னும் அறிவிக்க வில்லை. ‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையைவிட திருமணம் என்னும் பந்தம்தான் முக்கியம் என்று நம் நீதிமன்றங்கள் கருதுவது எவ்விதத்தில் சரி?’’ என பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பிவருகிறார்கள்.

ஒரு சாமான்யனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான். பெண்களைப் பாதுகாப்ப தென்பது நீதித்துறைக்கு மட்டுமேயான பிரச்னையல்ல... அது இந்தச் சமுதாயத்துக்கான பிரச்னை. ஆனால், சமுதாயத்தில் நிகழும் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய நீதிபதிகளே இப்படியான கருத்துகளைத் தெரிவிப்பது, நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கீழிறக்கவே செய்யும்!