Published:Updated:

விவாகரத்தான கணவரை விருந்தினர் போல் உபசரிக்க வேண்டுமா? தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்

குறைகளுடன் நீதிமன்றத்தை நாடிய வழக்காடிகளின் உரிமைகளை தீர்மானிக்கும் விஷயத்தில், இப்படிப்பட்ட நிபந்தனைகள் பொருத்தமற்றவை என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

விவாகரத்தான கணவரை விருந்தினர் போல் உபசரிக்க வேண்டுமா? தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

குறைகளுடன் நீதிமன்றத்தை நாடிய வழக்காடிகளின் உரிமைகளை தீர்மானிக்கும் விஷயத்தில், இப்படிப்பட்ட நிபந்தனைகள் பொருத்தமற்றவை என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

விவகாரத்து ஆன பின்னர், குழந்தையைப் பார்க்க வரும் கணவரை விருந்தினர் போல் உபசரிக்க வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை, நீதிபதி பரேஷ் உபாத்யாத் மற்றும் நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு ரத்து செய்தது.

Divorce
Divorce
Pixabay

தாயுடன் வசிக்கும் குழந்தையைச் சந்திக்கும் உரிமையை வழங்கக்கோரி, தந்தை ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் கடந்த ஜூலை 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தனி அமர்வு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், ``ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோரை அணுகவும், அவர்களிடம் அன்பினைப் பெறவும் உரிமை உண்டு. வாழ்க்கைத் துணைவர்களுக்குள் வேறுபாடு இருப்பினும், குழந்தைக்கு பெற்றோர்கள் மீதான பிணைப்பை மறுக்கக்கூடாது. குழந்தையின் ஒரு பெற்றோர் மற்றொரு பெற்றோர் மீது வெறுப்பினையும் பயத்தினையும் ஊட்டி வளர்ப்பது அக்குழந்தையின் மனநலனிற்கு தீங்கானது.

மேலும், கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும், குழந்தையைப் பார்க்க வரும் கணவனை விருந்தாளியாகக் கருதி உபசரிக்க வேண்டும். ஏனெனில், அந்த விருந்தினர் வேறு யாருமில்லை, குழந்தையின் இன்னொரு பெற்றோர்தான். எனவே, தந்தைக்கு குழந்தையை சந்திக்கும் உரிமை உண்டு” என்று தீர்ப்பளித்தார்.

chennai high court
chennai high court

இந்த தீர்ப்பிற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம், `தேநீரும், சிற்றுண்டியும் ஒரு பெற்றோர் மற்றொரு பெற்றோருக்கு வழங்கி, பெற்றோர்கள் இருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, நீதிபதி தீர்ப்பெழுதியுள்ளார். குறைகளுடன் நீதிமன்றத்தை நாடிய வழக்காடிகளின் உரிமைகளை தீர்மானிக்கும் விஷயத்தில், இப்படிப்பட்ட நிபந்தனைகள் பொருத்தமற்றவை’ என்று கூறி, தனி நீதிபதியின் தீர்ப்பினை திரும்பப் பெற்றதுடன், முன் அனுமதியுடன் குழந்தையைக் காண தந்தை செல்லலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

- வழக்கறிஞர் நிலவுமொழி செந்தாமரை