Published:Updated:

`காமராஜர் நினைவிடத்தை சுத்தம்செய்த மாணவர்கள்’ - `குடி’யால் கிடைத்த தண்டனை!

student
student

மது அருந்தி கல்லூரிக்குள் சென்றதற்கு தண்டனையாக நீதிமன்ற உத்தரவுப்படி காமராஜர் இல்லத்தை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் கல்லூரியில் உள்ள ஆய்வகத்துக்கு மதுபோதையில் வந்தது தெரியவந்தது. எனவே, அவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்த முடிவு செய்தது.

kamarajar illam
kamarajar illam

ஆனால் தங்களை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ``மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் தான். இறுதியாண்டில் மாணவர்களை கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பினால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். தவறை உணர்ந்துள்ள மாணவர்கள் இனிமேல் இதுபோல நடக்காது என உறுதியளித்துள்ளனர். எனவே, சுதந்திர தினத்தன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், அங்கே வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை நினைவிடத்துக்கு வெளியே மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தி மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார். இதனை மாணவர்கள் நிறைவேற்றினால் அவர்களை கல்லூரியில் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார்.

student
student

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சுதந்திர தினமான இன்று காலை காமராஜர் நினைவிடத்துக்கு வந்த மாணவர்கள் இல்லத்தை சுத்தம் செய்து அங்கே வந்த பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு