எட்டுத்திசைகளிலும் கொட்டிக்கிடக்கின்றன கொரோனா செய்திகள். ஆனால், இந்தச் செய்திகளில் மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நம்பிக்கையும் தரும் செய்திகள் எத்தனை, அச்சமும் பதற்றமும் பீதியும் ஏற்படுத்துபவை எத்தனை... இதுதான் இப்போதைய கேள்வி!

நாடு தழுவிய ஊரடங்குக்கு முன்னோட்டமாக, மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ‘மார்ச் 24-ம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்’ என பிரதமர் அறிவித்திருந் தார். கொரோனா தாக்கம் பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது அவசியமானது. அதற்கேற்றவாறு ரயில், பேருந்து என அனைத்துப் போக்குவரத்துகளும் ரத்துசெய்யப்பட்டன. பல்வேறு தொழில்களும் தற்காலிகமாக முடங்கின. அத்தியாவசிய சேவைகள் இயங்குவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். தொழில் இல்லை, வருமானம் இல்லை, உணவு கிடைப்பதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்பதால், சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர வேறுவழி இல்லை. இதனால் வட இந்தியா முழுவதும் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே தங்களுடைய ஊர்களுக்குச் சென்றனர்.

இத்தகைய தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ‘ஊரடங்கு பற்றிய போலிச்செய்திகள் பரவியதுதான், பதற்றம் உருவாகி... தொழிலாளர்கள் இடம்பெயர காரணம். இதனால் ஊடகங்கள், கொரோனா பற்றிய செய்திகளை அரசாங்கத்திடம் உறுதிப்படுத்திவிட்டுத்தான் வெளியிட வேண்டும்’ என உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. அந்தத் தீர்ப்பில், ‘ஊடகங்களின் பணியில் நேரடியாகத் தலையிட விரும்பவில்லை. ஆனால், ஊடகங்கள் அரசாங்கம் தரும் தகவல்களை வெளியிட வேண்டும். ஊரடங்கு பற்றிய போலிச்செய்திகள் பரவியதுதான் தொழிலாளர்கள் பதற்றத்துடன் இடம் பெயர்ந்ததற்குக் காரணம்’ எனத் தீர்ப்பளித் திருந்தது. இந்தத் தீர்ப்பு, பல தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறது.

இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் விஜய் சங்கர் நம்மிடம், ‘‘கொரோனா குறித்து போலிச்செய்திகள் அதிகமாகப் பரவுவது உண்மைதான். இதில் சமூக ஊடகங்கள்தான் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இத்தகையதொரு சூழலில் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். கொரோனா தொடர்பான அரசின் தரவுகளும் சில இடங்களில் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளன. அதில் உள்ள நிறை குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகத்தின் கடமை.

கொரோனா பற்றிய போலிச்செய்திகள் ஒருபுறம், கொரோனா பற்றி ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது மறுபுறம். இவை இரண்டுக்கும் தொடர்பில்லை. ஆனால், மத்திய அரசு இவை இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

மத்திய அரசு, நாடு தழுவிய ஊரடங்குக்கு சரியாகத் தயாராகவில்லை. நாடு தழுவிய ஊரடங்கு தொடர்பாக முன்னேற்பாடுகளற்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்புதான், மக்கள் மத்தியில் பதற்றம் உருவாகக் காரணம். அதை மறைக்க, தற்போது ஊடகங்கள் மீது பழிசுமத்துகிறது. உச்ச நீதிமன்றமும் அதை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது ஆபத்தான போக்கு. கட்டுப்பாடுகள் நிறைந்த காலகட்டத்தில் ஊடகங்களுக்கான சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டிய கடமை, நீதித்துறைக்கு உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசும் நீதித்துறையும் தங்களுடைய கடமையைச் செய்ய தவறிவிட்டன. அதற்கு ஊடகங்களைப் பழிசுமத்துவது சரியானதல்ல’’ என்றார்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் ராகவன் நம்மிடம், ‘‘போலிச்செய்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நாம் தினந்தோறும் பார்த்துவருகிறோம். கொரோனா போன்ற விஷயங்களில் போலிச்செய்திகள் பரவுவது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கான பொறுப்பு, ஊடகங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே உள்ளது. மற்றபடி ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அரசுக்குக் கிடையாது. ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதைப் போல் அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயல்வதாகவே இதை எடுத்துக் கொண்டாலும், இந்த விஷயத்தின் தீவிரத்தை உச்ச நீதிமன்றம் உணர்ந்ததால்தானே அப்படியொரு கருத்தைத் தெரிவிக்க வேண்டியிருந்தது. எனவே, இதன்மூலம் ஊடகச் சுதந்திரத்தை அரசு கட்டுப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு தேவையற்றது” என்றார்.

ஊடகங்களுக்கென்று மட்டுமல்ல... அரசுத்துறை, நீதித்துறை என அனைத்துத் துறைகளுக்குமே அறங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவரவர் அறத்தை அவரவர் காப்பாற்ற வேண்டியது மிகமிக முக்கியம்.