Published:Updated:

இளம்பெண் பாலியல் வழக்கு: மரண தண்டனைக் கைதிகளை விடுவித்த உச்ச நீதிமன்றம்... காரணம் இதுதான்!

மரண தண்டனை ( pixabay )

கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், தண்டிக்கப்படாமலோ அல்லது விடுவிக்கப்பட்டாலோ, பொது சமூகத்திற்கும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் ஒருவித மனவேதனையும் விரக்தியும் ஏற்படும்.

2012- ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரவிக்குமார், ராகுல், வினோத் ஆகிய மூன்று கைதிகளை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

abuse
abuse

2014-ம் ஆண்டில் இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் மூன்று குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதை எதிர்த்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு, கடந்த திங்களன்று (நவம்பர்-7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில், நீதிபதி ரவீந்திர பட் மற்றும் நீதிபதி பீலா எம் திரிவேதி ஆகிய மூவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, இவ்வழக்கை விசாரித்தது. விசாரணையில், ``குற்றவாளிகளுக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டார்கள்’’ எனக்கூறி, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, அவர்கள் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பெண்ணின் பெற்றோர் ``கடந்த 10 ஆண்டுகளாக நானும், என் குடும்பத்தினரும் அனுபவித்த துயரங்களை நீதிபதிகள் புறக்கணித்துவிட்டனர்’’ என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

இந்நிலையில், குற்றவாளிகள் எனக் கருத்தப்பட்டவர்கள், ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதற்கான காரணத்தை உச்சநீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி எழுதிய தீர்ப்பில், `விசாரணையில் உள்ள நடைமுறை குறைபாடு’களைச் சுட்டிகாட்டி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

court
court

அதில் ``49 சாட்சிகளில் 10 பேரிடம் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அதோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசுத்தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதால், மிக கொடுமையான குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 

கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், தண்டிக்கப்படாமலோ அல்லது விடுவிக்கப்பட்டாலோ, பொது சமூகத்திற்கும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் ஒருவித மனவேதனையும் விரக்தியும் ஏற்படும்.

அதேசமயம் குற்றம் சாட்டப்பட்டவரை நம்பிக்கையின் அடிப்படையிலோ அல்லது சந்தேகத்தின் அடிப்படையிலோ மட்டும் தண்டிக்க சட்டம் அனுமதிக்காது. அதோடு குற்றத்தை உறுதிசெய்யும் வகையில் குறுக்கு விசாரணை செய்யப்பட வில்லை அல்லது போதுமான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. 

எந்தவொரு வெளிப்புற தார்மீக அழுத்தத்தாலும் பாதிக்கப்படாமல், ஒவ்வொரு வழக்கையும் சட்டத்தின்படி நீதிமன்றம் அணுக வேண்டும். 

குற்றவாளிகள் என நிரூபிக்க போதிய ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை என்ற காரணத்துக்காகவே, சந்தேகத்தின் பலன் அடிப்படையில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முடிவு, நீதிமன்றங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே செயல்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது!