Published:Updated:

குழந்தை பெற்றபிறகு ஆணாக மாறிய பெண்; பாஸ்போர்ட்டில் அம்மா என இருப்பதை மாற்றுவது சாத்தியமா?

Passport (Representational Image) ( Image by Joshua Woroniecki from Pixabay )

தன் மகன்களின் பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயர் என்று குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் `பெற்றோர்' என்று மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதுபோன்று மாற்றம் செய்வது சட்டப்படி இயலுமா என்று வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தியிடம் கேட்டோம்.

குழந்தை பெற்றபிறகு ஆணாக மாறிய பெண்; பாஸ்போர்ட்டில் அம்மா என இருப்பதை மாற்றுவது சாத்தியமா?

தன் மகன்களின் பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயர் என்று குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் `பெற்றோர்' என்று மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதுபோன்று மாற்றம் செய்வது சட்டப்படி இயலுமா என்று வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தியிடம் கேட்டோம்.

Published:Updated:
Passport (Representational Image) ( Image by Joshua Woroniecki from Pixabay )

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார் சென்னையைச் சேர்ந்த திருநம்பி கவின். பெண்ணாகப் பிறந்த அவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தனது 36-வது வயதில் ஆணாக மாறி இருக்கிறார். தன் மகன்களிடம் தன்னை `அம்மா' என்று அழைக்க வேண்டாம் `அப்பா' என்று கூப்பிடுமாறு தெரிவித்துள்ளார். குழந்தைகளும் அவரின் மனதை உணர்ந்து `அப்பா' என்றே அழைத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகத்தால் ஏற்பட்ட சில பிரச்னைகளால் தம்பதியர் 2019-ல் விவாகரத்து பெற்றனர்.

இரு குழந்தைகளும் திருநம்பி கவின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தன் மகன்களின் பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயர் என்று குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் `பெற்றோர்' (parent) என்று மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதுபோன்று மாற்றம் செய்வது சட்டப்படி இயலுமா என்று வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தியிடம் கேட்டோம்.

ஆதிலட்சுமி லோகமூர்த்தி
ஆதிலட்சுமி லோகமூர்த்தி

``2014- ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம்தான் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய விழிப்புணர்வே மக்களிடம் ஏற்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Self Identified Transgender Person) சுய அடையாள மாற்றுப் பாலினத்தவர் என்ற அடையாளம் கொடுத்து, அவர்களும் கல்வியில், வேலைவாய்ப்பில், மருத்துவ ரீதியான சிறப்பு சலுகைகள் பெறுவது போன்ற பல்வேறு விஷயங்கள் பகிரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 2019 -ம் ஆண்டு மாற்றுப் பாலினத்தவர் சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது.

அதற்கு முன் நாடாளுமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மற்றொன்று நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தாக்கல் செய்த தனிநபர் மசோதா. அதில் பல பரிந்துரைகள் எடுத்துரைக்கப்பட்டன.

எனினும் அன்றைய அரசு தாக்கல் செய்த மசோதாவே ஏற்றுக் கொள்ளப்பட்டு 2019-ம் ஆண்டு மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டமாக வந்தது. இந்தச் சட்டத்தில் திருநங்கை, திருநம்பிகளுக்கான பல்வேறு விஷயங்களுக்கான உரிமைகள் பற்றி கூறியிருந்தாலும், திருமணம், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை இந்தச் சட்டம் உள்ளடக்கவில்லை.

அதன்படி, பாலின மாற்றம் பெற்ற நபராக திருநங்கை அல்லது திருநம்பியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்து அதன் மூலம் மாற்றுப் பாலினத்தவர் என்ற அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை அடையாள அட்டையை வாங்கிய பிறகு மாற்றுப் பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்டால், அறுவை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது அந்தப் பொறுப்பில் இருக்கக்கூடிய மருத்துவ அதிகாரியிடமிருந்து உரிய சான்றிதழைப் பெற்று மீண்டும் திருத்தப்பட்ட அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

LGBTQ
LGBTQ
Photo by Jose Pablo Garcia on Unsplash

இந்த அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பிறகு அரசிதழில் (Gazette) பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை செய்தித்தாளில் வெளியிட்ட பிறகு, அதை ஆதாரமாகக்கொண்டு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் என எல்லாவற்றிலும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.

இப்போது திருநம்பி கவின் விஷயத்துக்கு வருவோம்... தாய் தந்தை இருவரையும் சேர்த்துக் குறிப்பிடும் சொல்தான் `பெற்றோர்' . தான் ஓர் ஆண் என்பதைக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு இவர் உணர்ந்துள்ளார். இரண்டு தந்தைகள் என்று குறிப்பிடும் வாய்ப்பு இல்லாததால் தன்னைப் `பெற்றோர்' எனக் குறிப்பிடும்படி கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் என்று குறிப்பிடுவதைவிட `சட்டபூர்வ பாதுகாவலர்' (Legal Guardian) எனக் குறிப்பிடக் கோரினால் அது அனுமதிக்கப்படலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மாற்றுப் பாலினத்தவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் மனித உரிமைகள் உண்டு" என்று தெரிவித்தார்.