Published:Updated:

தேசத்துரோக வழக்கு - நேரில் ஆஜராகி நடிகை கங்கனா மும்பை போலீஸில் வாக்குமூலம்!

நடிகை கங்கனா
நடிகை கங்கனா

நடிகை கங்கனா ரணாவத் தேசத்துரோக வழக்கில் போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

நடிகை கங்கனா ரணாவத், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் இரு சமுதாயங்களுக்கு இடையே பதற்றத்தைத் தூண்டும் வகையில் செய்திகளைப் பதிவிட்டு வந்ததோடு, அறிக்கையும் வெளியிட்டுவந்தார்.

தனது சகோதரியுடன் கங்கனா
தனது சகோதரியுடன் கங்கனா

இது குறித்து பாலிவுட் கலை இயக்குநரும், உடற்பயிற்சியாளருமான அலி சையத் மும்பை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், `நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரி ரங்கோலி ஆகியோரின் சமூக வலைதளத் தகவல்கள் குறித்து விசாரிக்க போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார். போலீஸார் இந்தப் புகார் குறித்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் மீது இரு சமுதாயத்தினரிடையே மத அடிப்படையில் வெறுப்பைத் தூண்டியது, மத உணர்வை காயப்படுத்தியது, தேசத் துரோக வழக்கு ஆகியவை பதிவு செய்யப்பட்டன.

இல்லத்தரசிகளுக்குச் சம்பளம்... எதிர்க்கும் கங்கனா ரணாவத்... காரணம் என்ன?!

இது குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படி போலீஸார் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பினர். ஆனால், தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட மூன்று சம்மனுக்கும் அவர்கள் ஆஜராகவில்லை. தங்களின் சகோதரனின் திருமண வேலையில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று இருவரும் காரணம் கூறினர்.

நடிகை கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத்

இந்தநிலையில், இரண்டு பேரும் ஜனவரி 8-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி நவம்பர் 24-ம் தேதி இருவருக்கும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சகோதரிகள் இரண்டு பேரும் போலீஸார் முன்பு ஆஜராகினர். அவர்களிடம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு