Published:Updated:

`பெற்றோர் தாமாக மகளுக்கு கொடுக்கும் பரிசுகள் வரதட்சணை அல்ல!' - கேரள உயர்நீதிமன்றம்

Marriage
News
Marriage ( Pixabay )

சம்பந்தப்பட்ட வழக்கில் மனுதாரரின் மனைவி, தன் கணவருடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து வரதட்சணை தடுப்பு அதிகாரியை அணுகியுள்ளார். திருமணத்தின்போது பெற்ற நகைகளைத் திருப்பித் தருமாறு கொல்லம் மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரி, அந்தக் கணவருக்கு உத்தரவிட்டார்.

திருமணத்தின்போது மணமகளுக்கு அவர் பெற்றோர் கொடுக்கும் பரிசுகள் வரதட்சணை அல்ல என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெற்றோர் திருமணத்தின்போது தங்கள் மகளுக்கு அளிக்கும் பரிசுகள் அவர் நலனுக்கானது என்றும், இது வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் வரதட்சணையாகக் கருதப்படாது என்றும், மேலும் மணமகன் வீட்டாரின் கோரிக்கை, வற்புதல் இன்றி, திருமணத்தின்போது மணமகளின் பெற்றோர் தங்கள் மகளுக்குக் கொடுக்கும் பரிசுப் பொருள்களை வரதட்சணையாகக் கருத முடியாது எனவும் ஒரு வழக்கில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்பந்தப்பட்ட வழக்கில் மனுதாரரின் மனைவி, தன் கணவருடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து வரதட்சணை தடுப்பு அதிகாரியை அணுகியுள்ளார். திருமணத்தின்போது பெற்ற நகைகளைத் திருப்பித் தருமாறு கொல்லம் மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரி, அந்தக் கணவருக்கு உத்தரவிட்டார். ஆனால் உத்தரவை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுதாரரின் மனைவி, தன் திருமணத்தின்போது தனது பெற்றோரால் கொடுக்கப்பட்ட 55 சவரன் நகையை வங்கி லாக்கரில் வைக்குமாறு கணவர் கூறியதாகவும், அவை கணவன், மனைவி இருவரின் பெயரில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார். தங்கள் உறவில் விரிசல் ஏற்பட, அந்த நகைகளைத் திருப்பித் தருமாறு அந்தப் பெண் தன் கணவரிடம் கேட்டுள்ளார். மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரியும் நகைகளைத் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார்.

ஆனால், அந்த நகை வரதட்சணையாக வழங்கப்படவில்லை என்றும், அத்தகைய உத்தரவை பிறப்பிக்க அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

விசாரிக்கப்பட்ட அவ்வழக்கில், கொல்லத்தின் வரதட்சணை தடை அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், கொல்லம் பகுதியைச் சேர்ந்த மனுதாரருக்கு, அவரின் மனைவி குடும்பத்தினர் பரிசாக அளித்த நகைகளை மனைவியிடமே திருப்பித் தருமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி எம்.ஆர்.அனிதா, `அத்தகைய பரிசுப் பொருள்களை வரதட்சணையாகக் கருத முடியாது' எனக் கூறினார்.

Court- Representational Image
Court- Representational Image
Image by succo from Pixabay

`ஆபரணங்கள் அல்லது பரிசுப் பொருள்கள், கேட்டுப் பெறப்பட்ட வரதட்சணையாக அமைந்தால் மட்டுமே, வரதட்சணை தடுப்பு அதிகாரிக்கு இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் உண்டு. இந்த வழக்கில், பரிசுகள் வரதட்சணையாக இல்லை.

திருமணத்தின்போது எந்த கோரிக்கையும் இல்லாமல் மணமகளுக்கு அவர் பெற்றோரால் வழங்கப்பட்ட பரிசுகள், வரதட்சணை சட்டத்தின் கீழ், வரதட்சணை வாங்கும், வழங்குவதைத் தடைசெய்யும் பிரிவு 3(1)-ன் வரம்பிற்குள் வராது' என்று நீதிபதி எம்.ஆர்.அனிதா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அந்தக் கணவர், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தன் மனைவியின் நகைகள், மற்றும் மணமகள் வீட்டார் தனக்குக் கொடுத்த தங்கச் சங்கிலியை திருப்பித் தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, தீர்வு காணப்பட்டது.

கேரள வரதட்சணை தடை சட்டம் என்ன சொல்கிறது?

2021-ம் ஆண்டு கேரள அரசு வரதட்சணைத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து, மாநிலத்தில் வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் மற்றும் குற்றங்களைத் தடுக்க மாவட்டங்கள் தோறும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் நியமித்தது.

Marriage - Representational Image
Marriage - Representational Image

அதன்படி திருமணத்தின்போது வழங்கப்படும் விலைமதிப்பற்ற பொருள்கள் மூன்று மாதங்களுக்குள் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளாக செயல்படும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.