Published:Updated:

தற்காப்புக்காகக் கொலை செய்தால் தண்டனை கிடையாதா... இந்திய தண்டனைச் சட்டம் என்ன சொல்கிறது?

கொலை ( Representational Image )

``திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண் வழக்கில், காவல்துறை அந்தப் பெண்ணை விடுதலை செய்திருப்பது சரியானதுதான்'' - முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்.

Published:Updated:

தற்காப்புக்காகக் கொலை செய்தால் தண்டனை கிடையாதா... இந்திய தண்டனைச் சட்டம் என்ன சொல்கிறது?

``திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண் வழக்கில், காவல்துறை அந்தப் பெண்ணை விடுதலை செய்திருப்பது சரியானதுதான்'' - முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்.

கொலை ( Representational Image )

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தன்னிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் காவல்துறை அந்தப் பெண்ணை விடுதலை செய்திருக்கிறது. தற்காப்புக்காகக் கொலை செய்திருக்கும் காரணத்தால், அந்தப் பெண் விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கிறது காவல்துறை.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image
இந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் படிக்கக் கீழ்க்காணும் லிங்க்கை க்ளிக் செய்யவும்!

தற்காப்புக்காகக் கொலை செய்யலாமா... சட்டம் என்ன சொல்கிறது? என்பது பற்றித் தெரிந்துகொள்ள முன்னாள் நீதிபதி வள்ளிநாயகத்தைத் தொடர்புகொண்டோம். ``இந்திய தண்டனைச் சட்டத்தில் தற்காப்புரிமை (Private Defense) என்ற சட்டம் ஒன்று இருக்கிறது. அதில் ஐபிசி பிரிவு 100-ன் படி, உங்களை யாராவது தாக்க வரும்போது, தற்காத்துக்கொள்வதற்காக நீங்கள் அவரைத் தாக்கலாம். அந்தத் தாக்குதல் கொலையாக மாறிவிட்டால்கூட நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலைக்குத்தான் தண்டனை உண்டு. தற்காத்துக் கொள்வதற்காகச் செய்திருந்தால் தண்டனை கிடையாது'' என்றவரிடம், `இந்தச் சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்?’ என்று கேட்டோம்.

``அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். பெண்களுக்கு மட்டும்தான் இந்தச் சட்டம் என்றில்லை. ஆண் ஒருவரை, மற்றொருவர் தாக்க வந்தால்கூட, அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் திரும்பித் தாக்கலாம். ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப வழக்குகள் கையாளப்படும். அதாவது உங்களைக் கட்டைகொண்டு இரண்டு அடி அடிப்பவரை, நீங்கள் கொலை செய்துவிட்டால் இந்தc சட்டம் உங்களுக்கு உதவாது. விசாரணையின்போது சம்பவம் நடந்த சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே, கொலை செய்தவர் குற்றவாளியா இல்லை குற்றமற்றவரா என்று தீர்மானிக்கப்படும்.

முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்
முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்

திருவள்ளூர் பெண்ணின் வழக்கில், அந்த இளைஞர் கொலை செய்யப்படவில்லையென்றால், அந்தப் பெண்ணை இளைஞர் கொலை செய்திருப்பார் அல்லது பாலியல் வன்கொடுமை செய்திருப்பார். அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக மட்டுமே தன் கையில் கிடைத்த கத்தியைக்கொண்டு கொலை செய்திருக்கிறார். எனவே, திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண் வழக்கில், காவல்துறை அந்தப் பெண்ணை விடுதலை செய்திருப்பது சரியானதுதான். இது போன்ற ஏராளமான வழக்குகள் இந்தியாவில் இருக்கின்றன. உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வரை சென்று விடுதலை செய்யப்பட்ட வழக்குகள்கூட இருக்கின்றன. சட்டம் என்பது மக்களை பாதுகாக்கத்தான் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் தற்காப்புரிமை செயல் சட்டமும் செயல்படுகிறது'' என்று முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார்.