Published:Updated:

கணவரின் இமேஜை குலைக்க அலுவலகம் சென்று திட்டிய பெண்: விவாகரத்தை உறுதி செய்த நீதிமன்றம்!

scold ( pixabay )

2019-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கணவர் தரப்பிலிருந்து தரப்பட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த பின் விவாகரத்து வழங்கியது.

கணவரின் இமேஜை குலைக்க அலுவலகம் சென்று திட்டிய பெண்: விவாகரத்தை உறுதி செய்த நீதிமன்றம்!

2019-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கணவர் தரப்பிலிருந்து தரப்பட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த பின் விவாகரத்து வழங்கியது.

Published:Updated:
scold ( pixabay )

கணவரின் அலுவலகத்துக்குச் சென்று, தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அவமானப்படுத்தியதுக்காக அளிக்கப்பட்ட விவகாரத்து சரியானதே எனத் தெரிவித்துள்ளது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்.

Love marriage (Representational image)
Love marriage (Representational image)
Pixabay

சத்தீஸ்கர், தாம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது நபர், 2010-ம் ஆண்டில் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த 34 வயது கைம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். சில நாள்கள் கழித்து தன் மனைவி தன்னை மோசமாக நடத்துவதாகவும், தன் பெற்றோரையும் குடும்பத்தினரையும் சந்திக்க விடுவதில்லை என்றும் கூறி குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.

2019-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், கணவர் தரப்பிலிருந்து தரப்பட்ட ஆதாரங்களைப் பரிசீலித்த பின், விவாகரத்து வழங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தீர்ப்புக்கு உடன்படாத அப்பெண், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்த வழக்கின் விசாரணையில், கணவரின் தரப்பு வாதத்தின்போது, ``இந்த வழக்கில் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என அவருடைய கேரக்டரை குலைத்ததோடு மட்டுமல்லாமல், கணவரின் அலுவலகத்துக்குச் சென்று மனைவி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் பணியிடமாற்றம் செய்யக்கோரி, முதல்வருக்குக் கடிதமும் எழுதியுள்ளார்'' எனச் சொல்லி, போதிய ஆதாரங்களை அப்பெண்ணுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டது.

கணவரின் இமேஜை குலைக்க அலுவலகம் சென்று திட்டிய பெண்: விவாகரத்தை உறுதி செய்த நீதிமன்றம்!

நீதிபதிகள் கௌதம் பதுரி மற்றும் ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ``சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைப் பார்க்கும்போது, அந்தப் பெண் அற்ப விஷயங்களுக்கெல்லாம் தன்னுடைய கணவரை அவமதித் துள்ளார். அதோடு அவரின் அலுவலகத்துக்குச் சென்று அலுவலக அந்தஸ்தைக் குலைப்பதற்காக, தகாத வார்த்தைகளால் பேசி, வேறொரு பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் எனச் சொல்லி, மற்றவர் முன்னிலையில் அவருடைய இமேஜை கெடுத்துள்ளார். அதோடு அவரின் பெற்றோரைச் சந்திக்க விடாமல் செய்ததும் கொடுமையே. இந்த ஆதாரங்கள் உண்மையாக இருப்பதால் குடும்பநல நீதிமன்றம் அளித்த விவகாரத்தை உறுதி செய்கிறோம்'' எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.