Published:Updated:

“யாருமே இதைக் கவனிக்கவே இல்லையே...” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 5

“யாருமே இதைக் கவனிக்கவே இல்லையே...” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 5

“யாருமே இதைக் கவனிக்கவே இல்லையே...” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 5

“யாருமே இதைக் கவனிக்கவே இல்லையே...” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 5

“யாருமே இதைக் கவனிக்கவே இல்லையே...” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 5

Published:Updated:
“யாருமே இதைக் கவனிக்கவே இல்லையே...” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 5

“குழந்தையும் மலரும் செழிப்புள்ளவை. அவற்றை மென்மையாகக் கையாள வேண்டும்” என்பார் நம் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ஆனால், நன்றாகச் செழித்து வளர வேண்டிய அந்தக் குழந்தையைத்தான் சிதைத்துவிட்டான் தஷ்வந்த். சிதைத்ததோடு மட்டுமின்றி, ஹாசினியின் பெற்றோரோடும், உறவினர்களோடும் குழந்தையைத் தேடியதுதான் கொடுமையிலும் கொடுமை. “போலீஸ் விசாரணைக்குப் பிறகுதான் நிறைய விஷயங்கள் தெரிய வந்தன” என்கிறார், ஹாசினியின் தந்தை ஶ்ரீனிவாஸ் பாபுவின் உறவினர் மாருதி.

இதுகுறித்து அவர், “நாங்க ஹாசினியைக் காணோம்னு எல்லா இடங்களிலும் தேடிக்கிட்டிருந்தோம். அந்தப் பையனும் வந்து எங்ககூடத் தேடினான். 100-க்குப் போன் பண்ணி, ‘குழந்தையைக் காணோம்’னு கம்ப்ளெய்ன்ட் செஞ்சதும் அவன்தான். சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் பார்த்துக்கிட்டிருந்தப்போ, கூடவே நின்னு ‘ஜூம் பண்ணுங்க... லெஃப்ட் திருப்புங்க’னு ரொம்ப ஆர்வமா தேடின மாதிரி நடிச்சான். அதுமட்டும் இல்லாம, ஒரு டி.வி. சேனல் ரிப்போர்ட்டரைக் கூட்டிக்கிட்டு வந்து, ‘குழந்தையைக் காணோம். தகவல் தெரிஞ்சா தொடர்புகொள்ளுங்க’னு பேட்டியும் கொடுத்தான். இதனால அவன் மேல எங்களுக்குத் துளிகூடச் சந்தேகம் வரலை. ஆனா, தொடக்கத்துல இருந்தே அவனோட வீட்டைக் குறிவெச்சுத்தான் போலீஸ் விசாரிச்சது. வெளியில் தேடாம இங்கேயே விசாரிக்கிறாங்களேன்னு எங்களுக்குக்கூட வருத்தமா இருந்துச்சு. இவ்வளவு பெரிய குற்றத்தைப் பண்ணிட்டு எந்தப் பதற்றமும் இல்லாம, எப்படி அவனால் எங்ககூட நிற்க முடிஞ்சதுனு நினைக்கும்போது அதிர்ச்சியா இருக்கு” என்கிறார் ஒருவித பதற்றத்துடன்.

“எங்களுக்கும் பொம்பளைப் பசங்க இருக்குது. இதுபோன்ற ஆள்களை எல்லாம் தூக்குல போடுங்க” என்று பெண்கள் மத்தியில் அவனுக்கு எதிராகக் குரல் எழுகிறது. இதற்கிடையே சம்பவம் நடந்த அந்தச் சமயத்தில்... தோளில் பேக்குடன் செல்லும் தஷ்வந்த், பின்பு பேக் இல்லாமல் வீட்டுக்குள் வருவதை சி.சி.டி.வி. கேமராவில் கண்காணிக்கிறது போலீஸ். இதையே லீடாக வைத்து அவனை வளைக்கிறது. விசாரணையில், சிறுமி ஹாசினியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு... அவளின் உடலைச் சாக்குமூட்டையில் வைத்து பைபாஸ் சாலையின் அருகே எரித்துக் கொன்றதாகத் தெரிவிக்கிறான், தஷ்வந்த். இதனையடுத்து. மார்ச் 22-ம் தேதியன்று, தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. 

இந்த நிலையில், மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லச் செல்கிறார், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரிடம், “எங்க புள்ளைக்கு நேர்ந்த கதி இனிமேல் எந்தப் புள்ளைக்கும் வரக்கூடாதுங்க” என்று கதறியழுகின்றனர், ஹாசினியின் பெற்றோர். சுற்றி நின்றவர்களோ, “யாருமே இதைக் கண்டுக்கலீங்க. நீங்கதான் நடவடிக்கை எடுக்க வைக்கணும்” என்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வரும் ஸ்டாலின்,  “உயிர் போலக் கருதி வளர்த்த அந்தக் குழந்தையின் கருகிய உடலைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் (ஹாசினியின் பெற்றோர்) இன்னும் மீளவில்லை. பிள்ளையை இழந்து தவிக்கும் அந்தப் பெற்றோரை நான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தபோதும், அவர்களின் மனதில் உள்ள வேதனையும் அதன் வலியும் குறையவில்லை. எத்தனை கோடி முறை ஆறுதல் சொன்னாலும் அந்தப் பச்சிளங்குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரைத் தேற்ற முடியாது என்பதை உணருகிறேன்” என்று அறிக்கை வெளியிட்டார். 

அதேநேரத்தில்தான் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் களேபரங்களால் எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டு, ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். அன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் ஹாசினி விஷயம் உப்புச் சப்பில்லாமல் போகிறது. ஆனால், மறுபுறம் ஊடகங்கள் இதை ஊதித் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. போலீஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தபோதிலும், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்றம், அவனுக்கு ஜாமீன் வழங்குகிறது. சைதாப்பேட்டையில் இருந்த தன்னுடைய இடத்தை விற்று தன் மகனை வெளியே கொண்டுவருகிறார், தஷ்வந்தின் தந்தை சேகர். ஒருகட்டத்தில், தஷ்வந்துக்கு எதிரான குண்டர் சட்டமும் ரத்தாகிறது. இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்துக்கு எதிர்ப்புக் கிளம்புகிறது. 

பின்னர், தஷ்வந்தின் குடும்பம் மாதா தெரு மதனந்தபுரத்திலிருந்து, குன்றத்தூரில் உள்ள சம்பந்தம் நகருக்குக் குடிபெயர்கிறது. அங்கு, தஷ்வந்த் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்குச் சில காலம் தடை விதிக்கப்படுகிறது. பின்னர், எப்போதும்போல அவன் வெளியே செல்லத் தொடங்குகிறான். நாள்தோறும் தன் கை செலவுக்குப் பணம் கேட்டு வீட்டில் இருந்த பெற்றோரைத் தொந்தரவு செய்கிறான். அவர்கள் தரும் பணத்தை வைத்துக்கொண்டு மது குடிப்பது, கிளப் செல்வது என ஊதாரித்தனமாக அவன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறான். இதனால் மனம் நொந்துபோன அவனின் பெற்றோர், பணம் கொடுப்பதை ஒருகட்டத்தில் நிறுத்திவிடுகின்றனர். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் தஷ்வந்த்...

ஹாசினி சிறகடிக்கும்...