Published:Updated:

``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை

``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை

``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை

``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை

``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை

Published:Updated:
``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை

“இன்னிக்குக் காலையிலிருந்தே என் மனைவி தேவி கொஞ்சம் பதற்றத்தோடுதான் இருந்தாங்க. அவங்களைச் சமாதானம் செய்ய நானும் எவ்வளவோ டிரை பண்ணினேன். கடவுள் முன்னாடி நின்னுட்டு என் பொண்ணோட மரணத்துக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுன்னு வேண்டிட்டிருந்தாங்க. தண்ணீர்கூட குடிக்கலை. அவங்க பிரார்த்தனை வீண் போகலை. தீர்ப்பைக் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதாங்க. அவங்க மனசு பாரம் கரைய அழட்டும்னு விட்டுட்டேன்” என்கிறார் பாபு, போரூர் சிறுமியின் தந்தை.

2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூரில் தஷ்வந்த என்ற இளைஞனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி எரிக்கப்பட்ட 6 வயதுச் சிறுமி பற்றிய செய்தி, ஒவ்வொருவரின் இதயத்தையும் கலங்கச் செய்தது. குற்றவாளி தஷ்வந்த் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டத்தை உடைத்து, சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் அப்பா சேகர். அடுத்த 10 நாள்களுக்குள், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தன் அம்மாவையே கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார் தஷ்வந்த். காவல்துறையினர் மும்பைக்குச் சென்று, தஷ்வந்த்தைக் கைது செய்து தமிழகம் அழைத்துவந்தனர். செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை இப்போது உறுதிசெய்திருக்கிறது.

தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே போரூர் சிறுமியின் தந்தை பாபுவிடம் தொடர்புகொண்டபோது, ``இன்னும் கொஞ்ச நேரம்தானே சார் இருக்கு. நிச்சயமா இந்தத் தீர்ப்பு தப்பு பண்ணினவனுக்கு எதிரா வரும்னு எதிர்பார்க்கிறோம். இது, என் பொண்ணோட மட்டும் முடிஞ்சுடும் விஷயமில்லை. அவளை மாதிரி எத்தனையோ குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்க பயப்படுறோம். குற்றவாளி தண்டிக்கப்படணும். கண்டிப்பா தண்டிக்கப்படுவான் சார்” என்று நம்பிக்கையோடு பேசியிருந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் மீண்டும் அழைத்தபோது, தழுதழு குரலில் பேசினார். ``ஆரம்பத்துல நான்கூட நீதிமன்றத்து மேலே குற்றம் சொல்லிட்டிருந்தேன். நம்ம சட்ட திட்டங்களில் எனக்குப் பெருசா உடன்பாடு இருந்ததில்லே. இங்கே பெரிய ஓட்டை இருக்கு. அது வழியா குற்றவாளிகள் தப்பிச்சிடுவாங்கன்னு நம்பிட்டிருந்தேன். நேத்துவரை மனசை அரிச்சுட்டிருந்த கவலை போயிடுச்சு. தேவியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்மல் ஆகிடுவாங்க. ஆனாலும், தஷ்வந்தை என்னைக்குத் தூக்கில் போடறாங்களோ, அன்னைக்குத்தான் எங்க கவலை முழுசா தீரும். ஆசை ஆசையா வளர்த்த பொண்ணை, கதறக் கதற எரிச்சுக் கொன்ற பாவி சார் அவன். அந்த அதிர்ச்சியிலிருந்து எங்களால் எப்பவும் மீளவே முடியாது. தேவியை எத்தனையோ சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரிடம் காண்பிச்சு ஓரளவுக்கு நார்மலுக்குத் திரும்பி இருக்காங்க. என் மகன் தேஜூ, `அக்கா எங்கேப்பா? டியூஷன் போயிருக்காளா? என்னை விட்டுட்டு விளையாடப் போயிட்டாளா?'னு கேட்கும்போதெல்லாம் செத்துடலாம்போல இருந்துச்சு. ஒரு மூணு மாசமாதான் அவனும் அவங்க அக்கா பற்றி அதிகம் கேட்காமல் இருக்கான். அவன் முன்னாடி யாருமே என் மகளைப் பற்றி பேசறதில்லே. பாவம்... அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நாமே பறிச்சிடக் கூடாதுன்னு தேவிகிட்ட சொல்லியிருக்கேன். இன்னைக்கு அவன் முன்னாடி அழுதுடவே கூடாதுன்னு சொல்லியிருந்தேன். ஆனாலும், முடியல சார். இதோ, அவன் முன்னாடிதான் அழுதுட்டிருக்கோம். ஒரு பக்கம் எங்களை கன்ட்ரோல் பண்ண முடியாமல் தவிக்கிறோம். இன்னொரு பக்கம் தேஜுவுக்குத் திரும்பவும் அவங்க அக்கா நினைவு வந்துடக் கூடாதுன்னு பயப்படறோம். என்ன சார் பண்றது. தினம் தினம் செத்துப் பொழைக்க வேண்டியதா இருக்கு. இப்போதைக்கு இந்தத் தீர்ப்புதான் மனசுக்கு ஒரே ஆறுதல். இனியும் நாள் கடத்தாமல் தஷ்வந்த்தைத் தூக்கில் போடணும். அதுதான் இங்குள்ள குழந்தைகளுக்குச் சுதந்திரத்தையும் எங்களை மாதிரியான பெற்றோருக்குத் தைரியத்தையும் கொடுக்கும். சட்டத்தின் மேலே நம்பிக்கையை உண்டாக்கும்” என்கிறார் பாபு.

பாபுவுக்கும் தேவிக்கும் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் நிம்மதியைத் தந்திருக்கிறது உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. இனி குழந்தைகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு தஷ்வந்த் முகம் கண் முன்னே வந்துபோகும் என்பதில் சந்தேகமில்லை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism