Published:Updated:

ராஜலட்சுமி கொலை வழக்கு! - ஆட்சியரோ எஸ்.பி-யோ கள ஆய்வு செய்யக்கூட வரவில்லையா?

சிறுமி ராஜலட்சுமியைக் கொலை செய்த தினேஷ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் , பாதிக்கப்பட்ட ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என மதுரையில் எவிடன்ஸ் கதிர் வலியுறுத்தியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்தவர் சிறுமி ராஜலட்சுமி கடந்த 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமாரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொடூரமான முறையில் தலையை வெட்டிகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் எவிடன்ஸ் கதிர் ராஜலட்சுமியின் குடும்பத்தினருடன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், ``சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவம் நடைபெற்ற பகுதியில் நேரடிக் கள ஆய்வு செய்து தகவல்கள் திரட்டினோம். ஆனால், இந்தப் படுகொலை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை எஸ்.பி.,யோ சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளவில்லை.

இந்தப் படுகொலை குற்றவாளியான தினேஷ் குமாருக்கு வழக்கு முடியும் வரை பிணை கொடுக்கக் கூடாது. அவரால் படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு ஆபத்து உள்ளது. மீண்டும் 3 நபர்களை வெட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்கவேண்டும். ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணமும், ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும். இந்தப் படுகொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும், தினேஷ்குமாரின் மனைவி சாரதா, மற்றும் அவரது தம்பி சசிகுமார் ஆகியோரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். குற்றவாளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். அவருடன் ராஜலட்சுமியின் குடும்பத்தினரும் உறவினர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து தகவல் அளித்தனர்.