Published:Updated:

"அப்பா அம்மாட்ட காசு குடுத்தா குடிப்பாங்க!" 100 ரூபாய் கூலிக்கு மரம் ஏறும் பழங்குடிச் சிறுவன்

கணவன்-மனைவி இருவரும் கிடைக்கும் கூலியைப் பிள்ளைகளுக்கோ, குடும்பத்துக்கோ மறந்தும் செலவிடும் பழக்கமில்லாதவர்கள். இருவரும் மாலை நேரத்தில் சேர்ந்து மது அருந்துபவர்கள்.

"அப்பா அம்மாட்ட காசு குடுத்தா குடிப்பாங்க!" 100 ரூபாய் கூலிக்கு மரம் ஏறும் பழங்குடிச் சிறுவன்
"அப்பா அம்மாட்ட காசு குடுத்தா குடிப்பாங்க!" 100 ரூபாய் கூலிக்கு மரம் ஏறும் பழங்குடிச் சிறுவன்

ந்ரு, சுமார் 12 வயது மதிக்கத்தக்கப் பனியர் பழங்குடியினச் சிறுவன். மெலிந்த தேகத்துடன் ஓட்டை விழுந்த அரைக்கால் டவுசர், சட்டை அணிந்து பாவமாக இருந்தான். தாெடக்கப் பள்ளியைக்கூட தாெடர விரும்பாதச் சிறுவன். அவனின் தந்தைக்கு, பாேலியோ பாதிப்பால் ஒருபக்க கால் மற்றும் கை சிறுத்து உள்ளன. அவரது தாகத்தைத் தனித்துக்காெள்வதற்காகவே அவர் வசிக்கும் பனியர் பாடி (hamlet) அருகே அமைந்துள்ள கிராமங்களுக்குச் சென்று, தாேட்டங்களில் கூலி வேலை செய்கிறார். சந்ருவுக்கு ஓர் அக்கா, இரு தங்கைகள். தாய், கரும்பு மற்றும் தேயிலைத் தாேட்டங்களில் இலை பறிப்பாள், தோட்டங்களுக்கும் வேலைக்குச் செல்வாள். கணவன்-மனைவி இருவரும் கிடைக்கும் கூலியைப் பிள்ளைகளுக்கோ, குடும்பத்துக்கோ மறந்தும் செலவிடும் பழக்கமில்லாதவர்கள். இருவரும் மாலை நேரத்தில் சேர்ந்து மது அருந்துபவர்கள்.

குடும்பச்சூழல் காரணமாக படிப்பைத் தொடர விரும்பாத சந்ரு, தந்தைக்கு உதவியாக அவருடன் கூலி வேலைக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டான். தந்தைக்கு 300 ரூபாய் கூலி கிடைக்கும்போது, இவனுக்கு 100 ரூபாய் கூலி கிடைத்தது. சந்ருவுக்குக் கிடைக்கும் கூலியையும் சேர்த்து தந்தையே வாங்கி செலவுசெய்தார். இதனால் சில நேரம் தந்தையுடன் வேலைக்குச் செல்லாமல், தந்தை வேலைக்கு அழைத்துச் சென்ற தோட்டங்களுக்குத் தனியாகவே சென்று வேலை செய்கிறான்.

அப்படி ஒருநாள் அவனது வீட்டின் அருகே உள்ள தாேட்டத்துக்கு, தன் தம்பியுடன் சென்ற சந்ரு, ``தென்னை மரத்தில் ஏறி தேங்காய் தள்ளிவிடட்டா (பறித்துப் போடட்டா)"? எனத் தோட்டத்தின் உரிமையாளரிடம் கேட்க, அவர் ``சரி''  என்றார். உடனே சுற்றிச் சுற்றிப் பார்த்த சந்ரு, கீழே இருந்த பழைய சிமென்ட் கோணிப்பை ஒன்றை எடுத்து, தம்பி உதவியுடன் கிழித்து வட்டவடிவில் கட்டி, தன் கால்களில் மாட்டிக்காெண்டு மின்னல் வேகத்தில் தென்னைமரத்தில் ஏறத்தொடங்கினான். சில நிமிடத்திலேயே தேங்காய்களைத் தள்ளிவிட்ட அவன், அதே வேகத்தில் கீழிறங்கி, தள்ளிவிட்ட தேங்காய்களைப் பாெறுக்கி வீட்டுவாசலில் சேர்த்தான். இதற்காக அவன் பெற்ற கூலி 100 ரூபாய். ``அப்பாட்ட குடுப்பியா... அம்மாட்ட குடுப்பியா... என்னடா செய்வ இந்தக் காச?'' என உரிமையாளர் கேட்க, ``அவுங்கக்கிட்ட குடுக்க மாட்டேன். குடுத்தா குடிச்சிருவாங்க'' என்று ஓட்டம் பிடித்தான் சந்ரு. 

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுன்டி பகுதியில் அமைந்துள்ள பனியர் பாடியில் உள்ளது சந்ருவின் வீடு. பனியர் பாடியில் அரசு சார்பில் பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரும் பணிகள் ஒருபுறம் நடந்தாலும், சில மண் வீடுகளும் இருந்தன. ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் என்ற கணக்கில் வசிப்பதாக அங்கு இருந்த ஒரு மூதாட்டி தெரிவித்தார். இந்தப் பனியர் பாடியில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டிருந்தன. அந்தக் கழிவறைகள், தங்கும் ரூம்களாகவே பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடிந்தது. அந்தப் பனியர் பாடியில் இருந்த சில சிறுவர்கள், பள்ளிக்குச் சென்றுவிட்டதாக அங்கு இருந்த மூதாட்டிகள் கூறினர்.

மாெத்தம் 11 சிறுவர், சிறுமியர் பள்ளிக்குச் செல்வதாகச் சொன்ன அவர்கள், ``சந்ரு உட்பட 3 சிறுவர்கள் மட்டும் பள்ளிக்குச் செல்வதில்லை'' என்றனர். சந்ருவின் தங்கைகள் இருவரும் பள்ளிக்குச் செல்ல புறப்பட்டுக்காெண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பனியர் பாடியில் உள்ள பழங்குடியினச் சிறுவர்கள் ஆட்டாே மூலம் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆட்டாேவுக்கான தொகை அரசு சார்பில் வழங்கப்படுகிறது. சந்ருவின் தங்கைகள் ஆட்டோவின் வருகையை எதிர்ப்பார்த்து ரோட்டுக்கு நடக்க, சந்ருவிடம் ஏதும் கேள்விகள் கேட்டுவிடுவோம் என பயந்து குறுக்குவழியில் தலைமறைவானான். 

சந்ரு வேலைக்குச் செல்லும் இடங்களில் அவன் எதிர்காெள்ளும் பிரதான கேள்வி ``ஏண்டா ஸ்கூலுக்குப் போக மாட்டிங்குற?'' அதற்கு அவனது பதில், ``டீச்சர் அடிக்குறாங்க'' என்பதுதான். பழங்குடியினரின் கலாசாரத்தில் கல்விக்கான முக்கியத்துவம் மிகவும் குறைவு. அதேபாேல பழங்குடியின மாணவர்கள் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும்பாேது மாெழி ஒரு தடையாக அமைகிறது. இதுபோன்ற இடர்ப்பாடுகளைக் களைந்து பழங்குடியினச் சிறுவர்களுக்குக் கல்வி போதிக்க அரசு போதிய நடவடிக்கைகள் மேற்காெண்டாலும், மேலும் தீவிரப்படுத்தி, கண்காணித்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். 

இப்படிப் பல சந்ருக்கள் கல்வியைத் தாெடர விரும்பாமல் கூலி வேலைக்குச் செல்லும் சூழல் அதிகரித்துவருகிறது. அதைத் தவிர்க்க, கல்வியைத் தாண்டி பழங்குடியினரின் வரலாறு, வாழ்வுமுறை, உணவுமுறை உள்ளிட்டவற்றை ஆவனப்படுத்துவதற்கான செயல்முறை கல்வியை ஏற்படுத்தி, சந்ரு போன்ற சிறுவர்கள் வாழ்வில் மேம்பட வழிசெய்ய வேண்டும்.