“இயற்கை மருத்துவம், தற்சார்பு வாழ்க்கை முறை என பிரவீன் முழுக்கவே மாறிப்போய்விட்டார். எப்போதும் இயற்கை மருத்துவத்தைப் பற்றியே பேசுவார். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட நண்பர்களின் வட்டாரத்திலேயே அதிகமான நேரத்தை அவர் செலவிட ஆரம்பித்தார். இப்போது, இயற்கைப் பிரசவம் என்று சொல்லி, வீட்டிலேயே மனைவிக்குப் பிரசவம் பார்க்கப்போய், அவரது வாழ்க்கையே சோகமாகிவிட்டது” என்று மிகுந்த கவலையுடன் கூறினர், கார்த்திகேயனுடன் பணியாற்றியவர்கள்.

திருப்பூரை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி கிருத்திகா, ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தை, மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டுப் பிறந்தது. கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார். இயற்கை உணவு, இயற்கை விவசாயம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான கார்த்திகேயனுக்கு, தன் மனைவிக்கு வீட்டிலேயே வைத்து இயற்கையான முறையில் சுகப்பிரசவம் நடைபெறச் செய்ய வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. கணவர் விரும்பியதால், கிருத்திகாவும் அதற்கு சம்மதித்துள்ளார்.

பிரசவம் தொடர்பான பல தகவல்களை யூ டியூப் மூலம் அவர் திரட்டியுள்ளார். கிருத்திகாவுக்கு ஜூலை 22-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, ஏற்கெனவே வீட்டில் வைத்தே பிரசவம் நடத்திக் குழந்தை பெற்ற அனுபவமுள்ள பிரவீன் - லாவண்யா தம்பதியை கார்த்திகேயன் அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து வீட்டிலேயே கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. கணவரும் மற்றவர் களும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.

அந்த மகிழ்ச்சி அடுத்த சில நிமிடங்களில் கரைந்தது. கிருத்திகாவுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. நஞ்சுக்கொடியும் வெளியே வரவில்லை. இதனால், கிருத்திகா மயக்கமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், கிருத்திகா வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்தத் தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவ, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர். அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியதாக கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன்மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். பிரசவத்துக்கு உதவிய பிரவீனும் லாவண்யாவும் தலைமறைவாகிவிட்டனர். கிருத்திகாவுக்குப் பிறந்த குழந்தைக்கு, திருப்பூர் அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கிருத்திகாவின் குடும்பம் இப்போது மீளாத் துயரத்தில் மூழ்கியுள்ளது. கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம். “என் மகளை பி.எட் படிக்க வைத்து ஆசிரியை ஆக்கினேன். கார்த்திகேயனும் தாய்மாமன் மகன்தான். கார்த்திகேயனின் அப்பா தங்கவேல், சாகும்வரை மருத்துவமனை பக்கமே எட்டிப்பார்க்காத ஒரு மனுஷன். எந்த மருந்து மாத்திரையையும் அவர் சாப்பிட்டது கிடையாது. அதனால், எங்க மாப்பிள்ளைக்கும் இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு. கிருத்திகா கர்ப்பமடைந்ததும், ‘பிறக்கப் போறது நம் அப்பாதான்’ என்று எங்க மாப்பிள்ளை மனசுல தோணியிருக்கு. ‘எங்க அப்பாவே நமக்கு குழந்தையா வரப்போறாரு... ஹாஸ்பிட்டல் பக்கமே போகாத அவரை, நாமளும் தொந்தரவு பண்ண வேணாம். இயற்கை முறையில் வீட்டுல நாமே சுகப்பிரசவம் பார்த்துக்கலாம்’னு என் மகள்கிட்ட சொல்லிருக்கார். வீட்டுக்காரர் ஆசைப்படுறாரேன்னு அவளும் சம்மதிச்சுட்டா. எங்களுக்குத்தான் மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம்னு நானும் பலமுறை சொல்லிப் பார்த்து ஓய்ஞ்சுபோயிட்டேன். அவங்க கேட்கவே இல்லை. விடாப்பிடியா நின்னு இப்படியொரு விபரீதத்துல கொண்டுபோய் விட்டுட்டாங்க” என்று கதறினார்.

இது குறித்து திருப்பூர் மாநகர நல அலுவலர் பூபதியிடம் பேசினோம். “மருத்துவர், பயிற்சிபெற்ற செவிலியர் உள்ளிட்டோர்தான் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். ஆனால், கிருத்திகாவை எந்தவொரு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லக் கூடாது என்று பிரவீனும் லாவண்யாவும் கார்த்திகேயனைத் தடுத்துள்ளனர். பிரசவக்கால மரணங்களைக் குறைப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கர்ப்பம் தரித்த பெண்கள் அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, இ-சேவை மையங்களையோ அணுகி, தங்களுக்கான பேறுகால ஆர்.சி.ஹெச் ஐ.டி-யைப் பெற வேண்டும். அப்போதுதான், குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும் என்று அரசு சார்பில் உத்தரவும் போடப்பட்டுள்ளது. வீட்டில் தாங்களாகவே பிரசவம் பார்த்துக்கொள்வது போன்ற விபரீத செயல்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது” என்றார்.

இந்த விபரீத விளையாட்டு வேண்டவே வேண்டாம்!

- தி.ஜெயப்பிரகாஷ்