காணாமல் போன ரயில் பெட்டி!

2014 நவம்பரில், ஆந்திராவைச் சேர்ந்த நிறுவனமொன்று தன்னுடைய பொருட்களை உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பியது. அதற்காக இந்திய ரயில்வேயில் சரக்குப்பெட்டி ஒன்றைப் பதிவுசெய்தது.

ஆனால், அந்த சரக்குப்பெட்டி உரிய இடத்துக்குச் சென்றுசேரவில்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று அந்நிறுவனம் பலமுறை விசாரித்தும் பதில் இல்லை. ஏனெனில், அந்தப் பெட்டி எங்கு சென்றது என்றே ரயில்வே துறைக்கே தெரியவில்லை. அவர்கள் எவ்வளவோ முயன்றுபார்த்தும் பெட்டியைக் கண்டறிய இயலவில்லை.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அந்தப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கெட்டுப்போய்விட்டன.

இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் அந்தப் பெட்டி எங்கே இருந்தது? அப்படி அதிகாரிகளுக்கே தெரியாமல் ஒரு பெட்டி மாயமாகப் போய்விட இயலுமா? ரயில்வே துறை இப்படி அலட்சியமாக நடந்துகொண்டால் தொழில் நிறுவனங்கள் எப்படித் தங்களுடைய பொருள்களை அதில் அனுப்புவார்கள்?

ஜிம்முக்கு யார் செல்ல வேண்டும்?

ஜிம்முக்கு உடல் பருமனானவர்கள் செல்வார்கள், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் ஆணழகர்கள் செல்வார்கள் என்று பதில் சொன்னால், நீங்கள் உங்களுடைய தசைகளின்மீது அக்கறை செலுத்தவில்லை என்று பொருள்!

InBody, Ipsos என்ற நிறுவனங்கள் இந்தியர்களுடைய தசைவளத்தைப் பற்றி ஆராய்ந்துபார்த்திருக்கிறார்கள். அதில், 71 சதவிகிதம் இந்தியர்களுடைய தசைகள் ஆரோக்கியமாக இல்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உடற்பயிற்சிகள் எல்லாருக்கும் தேவை. ஒழுங்காக உடலைக் கவனித்துக் கொள்ளாவிட்டால், தசைகள் மோசமான நிலைக்குச் சென்றுவிடும். அதன்பிறகு தினசரி வேலைகளைக்கூட ஒழுங்காகச் செய்ய இயலாது.

உலகைச் சுற்றும் பெண்கள்!

உலகத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். ஆனால், அதன் பொருள், பல நாடுகளுக்குச் சென்று திரும்ப வேண்டும் என்பதுதான்.

அப்படியில்லாமல், உண்மையிலேயே ஒரு சிறு விமானத்தில் ஏறி உலகைச் சுற்றிவிட்டுத் திரும்ப இதே இடத்துக்கு வந்தால் எப்படியிருக்கும்?

இதைச் சிலர் செய்திருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் எல்லாருமே ஆண்கள்!

அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகச் சாதித்துவரும் பெண்கள், இதில்மட்டும் குறைந்துவிடுவார்களா? ‘உலகைச் சுற்றிவரும் முதல் பெண்கள்’ என்ற பெருமையுடன், ஆரோஹி, கெய்தாய்ர் என்ற இரண்டு இந்தியப் பெண்கள் புறப்பட்டிருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த இவர்கள் ஒன்றாகப் பறக்கக் கற்றுக்கொண்டவர்கள்; இப்போது ‘மஹி’ என்ற சிறு விமானத்தில் ஏறி உலகைச் சுற்றிவரப்போகிறார்கள்.

இவர்களைப் பார்த்து இன்னும் பல இந்தியப் பெண்கள் பெரிய கனவுகளை வளர்த்துக்கொண்டு சாதிப்பார்கள் என்று நம்பலாம்!

வெளிநாட்டு ஃபர்னிச்சர் கடை!

IKEA நிறுவனம், ஃபர்னிச்சர்கள், வீட்டுப்பொருள்கள் விற்பனையில் உலகப்புகழ் பெற்றது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தாங்களே எளிதாகப் பொருத்திக்கொள்ளக்கூடிய பொருள்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது.

இப்போது, IKEA முதன்முறையாக இந்தியாவுக்கு வருகிறது, ஹைதராபாத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தனது முதல் கடையைத் திறந்திருக்கும் IKEA அடுத்த சில ஆண்டுகளில் பல இந்திய நகரங்களில் 25 கடைகளைத் திறக்க உள்ளது.

என்னதான் பல நாடுகளில் கடைகளை நடத்திய அனுபவமிருந்தாலும், இந்தியர்களின் ஃபர்னிச்சர் தேவையைப் புரிந்துகொள்வதற்காக IKEA நிபுணர்கள் நிறைய உழைத்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள பொருள்களைக் கவனித்து, இந்தியாவில் எதை விற்றால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

இந்தக் கடையில் 1000 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய ஓர் உணவகமும் இருக்குமாம். சாப்பிட வருகிறவர்கள் நாற்காலி, மேசை வாங்குவார்கள் என்று எதிர் பார்க்கிறார்கள் போல!

என். சொக்கன்

தெரியுமா?

* ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற நாவலை எழுதியவர், ஜெயகாந்தன்.