கலைஞர் காலமானார்!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று கடந்த 7-ம் தேதி, சென்னையில் உயிரிழந்தார். 94 வயதை நிறைவு செய்துள்ள கருணாநிதியின் மறைவையடுத்து, அவரது உடல் அரசியல் தலைவர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி, தொடர்ச்சியாக 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராக இருந்து வந்தார். பொதுவாழ்வில் 80 ஆண்டுகள்; சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள்; கட்சித்தலைவராக 50 ஆண்டுகள் எனப் பல சாதனைகளைப் புரிந்த கருணாநிதி, இந்திய அரசியலில் 14 பிரதமர்களை கண்ட தலைவர் ஆவார். பத்திரிகையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல் தலைவர் என, சமகாலத்தில் சினிமா, இலக்கியம், அரசியல் எனப் பல்துறைகளில் ஆளுமை கொண்ட ஒரே தலைவராக இருந்தவர் கருணாநிதி.

கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்!

பெற்றோரிடம் கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யுமாறு மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “தனியார் பள்ளிகளை நடத்தி வரும் சில நிர்வாகிகள் பள்ளியை மூடப்போவதாகவும், பள்ளியை மூடாமல் இருக்க வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டுவதாகத் தகவல் வந்துள்ளது. எந்தத் தனியார் பள்ளிகளையும் திடீரென மூட முடியாது என்பதை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துக்கூற வேண்டும். கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் வரும் பட்சத்தில் இயக்ககம் சார்பில் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யலாம்.” எனக் கூறப்பட்டுள்ளது.

பெருக்கெடுத்த காவிரியால் ஆடிப்பெருக்கு கோலாகலம்!

நீர் வளம் பெருக வேண்டும் என வேண்டி வழிபடும் ஆடிப்பெருக்கு பண்டிகை இந்த முறை காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காவிரி தொடங்கும் இடமான ஒகேனக்கல் தொடங்கி மேட்டூர், பவானி கூடுதுறை, குளித்தலை, திருச்சி, ஸ்ரீரங்கம், கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை என காவிரி கடலுடன் சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காவிரிக் கரைகளில் மக்கள் குடும்பத்தோடு நீராடி, காவிரிக்குப் படித்துறைகளில் படையலிட்டு வழிபட்டனர்.

முழுக்க பெண்களே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்!

சென்னையில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களை முழுக்க முழுக்க பெண்களே நிர்வகிக்கின்றனர். இங்கு டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்பு, துப்புரவு உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவர்களை மேம்படுத்தும் விதமாக, ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த 2 மெட்ரோ ரயில் நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

- ஜெ.ரவி

தெரியுமா?

* தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 234.