Published:Updated:

இந்த நாள்

இந்த நாள்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

இந்த நாள்

லகில் உயிரினங்கள் வாழ, வான்பரப்பில் ஓஸோன் படலம் செய்துவரும் பணிகள் மகத்தானது. நம் கண்ணுக்குத் தெரியாத இந்த ஓஸோன் அடுக்குக்கு நன்றி தெரிவிக்கவும், நம்மை அறியாமல் ஓஸோன் படலத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை மற்றவர்களுக்கு உணரச்செய்யவும் உலக நாடுகள் செப்டம்பர் 16-ம் தேதியை `ஓஸோன் தின’மாகக் கடைப்பிடிக்கின்றன. 1987-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓஸோன் படலத்தைப் பாதிக்கச்செய்யும் ரசாயனங்களுக்கு எதிராக உடன்படிக்கை எனக் கையெழுத்தானது. அந்த தினமே ஓஸோன் தினமாக 1995-ம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மிழ்நாட்டைச் சேர்ந்த மாபெரும் வயலின் இசை மேதைகளில் இவரும் ஒருவர். இதுமட்டுமல்ல, பாடலாசிரியர்,  இசையமைப்பாளர்,  பாடகர் எனப் பன்முகத்துக்குச் சொந்தக்காரர். 12 வயதிலேயே இசைப்பயணத்தைத் தொடங்கியவர். இவரது தந்தை வீ.ஆர்.கோபால ஐயர்தான் இவரது குரு. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், சங்கீத சூடாமணி போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

இந்த நாள்

மூகச் சீர்திருத்தத்துக்காகவும், சாதி வேற்றுமையை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய பகுத்தறிவுக் கொள்கைகளும் மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளும் தமிழ்ச் சமூகத்தில், தமிழக அரசியலில் அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்தின. தீண்டாமைக்கு எதிராக தீவிரமாகப் போராடியவர்.

இந்த நாள்

லகப் புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகி. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி, சம்ஸ்கிருதம், குஜராத்தி போன்ற பல மொழிகளில் இவர் பாடியிருக்கிறார். உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஐ.நா சபையில்கூடத் தனது இசையால் அந்நிய மனங்களை அள்ளியவர். 1998-ம் ஆண்டு, பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டவர்.

இந்த நாள்

ந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை. கப்பல்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். சர்வதேச விண்வெளிநிலையத்தில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டார். விண்வெளிப் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்தவர் என்ற சாதனை படைத்தவர். இவர் 195 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.

இந்த நாள்

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும், சுற்றுலாவால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பதை விவரிக்கும் நோக்கத்திலும் உலகச் சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. `சுற்றுலா, மனிதகுலத்தை மேம்படுத்தும்’ என்ற அடிப்படையில் 1970-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகச் சுற்றலா தினமாக அறிவித்தது. சுற்றுலா மூலம் ஒரு நாட்டுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆச்சர்யம் என்னவென்றால், உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழிலாக, சுற்றுலாத் துறை விளங்குகிறது!

இந்த நாள்

தெரியுமா?

* வருமான வரித்துறையில் குறிப்பிடப்படும் TDS என்பதன் விரிவாக்கம் Tax Deducted at Source