Published:Updated:

குயர் சிறுவர்களுடன் உறவு; போப் பிரான்சிஸ் ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை!

குயர் சிறுவர்களுடன் உறவு; போப் பிரான்சிஸ் ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை!
குயர் சிறுவர்களுடன் உறவு; போப் பிரான்சிஸ் ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை!

குயர் சிறுவர்களுடன் பாலியல்ரீதியான உறவு வைத்திருந்த வாடிகன் கத்தோலிக்க சபை முன்னாள் பொருளாளர் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 

கத்தோலிக்க சபையின் தலைமையகம் வாடிகன் நகரில் உள்ளது. இதற்கு போப் ஆண்டவர் தலைவர். கன்னியாஸ்திரிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதிரியார்கள் பாலியல்ரீதியாக தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் அதிகரித்து வந்தன. சமீபத்தில் அமீரகம் சென்றிருந்த போப் பிரான்சிஸ் கூட கத்தோலிக்க சபையில் நிலவும் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வேதனையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், போப் பிரான்சிஸ் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகக் கருதப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிஷப் ஜார்ஜ் பெல்லுக்கு பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பெல். இவர் வாடிகன் கத்தோலிக்க சபையின் முன்னாள் பொருளாளர். போப் பிரான்சிஸ் ஆலோசகராகவும் இருந்து வந்தார். மெல்போர்ன் நகரில் உள்ள புனித பேட்ரிக் கதிட்ரல் ஆலயத்தில் ஜார்ஜ் பெல் பிஷப்பாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 1999-ம் ஆண்டு ஆலயத்தில் குயர் பாடும் சிறுவர்கள் இருவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 

விசாரணையில், 13 வயதுச் சிறுவர்களுடன் பிஷப் ஜார்ஜ் பெல் பாலியல் தொடர்பு வைத்திருந்தது உறுதியானது. தற்போது 77 வயதான ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், தன் மீதிக் காலம் முழுவதையும் சிறையில் கழிக்கும் நிலைக்கு ஜார்ஜ் பெல் தள்ளப்பட்டுள்ளார். தீர்ப்பளித்த நீதிபதி பெடர் கிட், `இந்தச் சம்பவம் ஜார்ஜ் பெல்லின் அகந்தையையும் சிறுவர்கள் மீது அவர் வைத்திருந்த வக்கிரத்தையும் காட்டுவதாகக் குறிப்பிட்டார். வருகிற ஜூன் மாதத்தில் ஜார்ஜ் பெல் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.