Published:Updated:

மனைவி, குழந்தைகளை கொன்று காவல்துறை அதிகாரி தற்கொலை!

Vikatan Correspondent
மனைவி, குழந்தைகளை கொன்று  காவல்துறை அதிகாரி தற்கொலை!
மனைவி, குழந்தைகளை கொன்று காவல்துறை அதிகாரி தற்கொலை!
மனைவி, குழந்தைகளை கொன்று  காவல்துறை அதிகாரி தற்கொலை!

ஜாக்தால்பூர்: சத்தீஸ்கரில் மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு, காவல்துறை அதிகாரியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாக்தால்பூரை சேர்ந்த காவல்துறை அதிகாரி படேல். சமீபத்தில் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் கார் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்னையின்போது, மாவட்ட நீதிமன்ற நீதிபதியை படேல் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து படேல், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், படேல் தனது மனைவி, மகள் மற்றும் 8 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் படேலின் மனைவி இறந்து விட்டார். குழந்தைகள் இருவரும் பலத்த காயத்துடன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறை அதிகாரி படேல், மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததில் ஜனாதிபதியிடம் இருந்து பரிசும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.