Published:Updated:

`3.18 லட்சம் குழந்தைகள் மாயம்!' - மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்

காணாமல்போன குழந்தைகள் பற்றிய தகவல்கள் TrackChild ', Khoya Paya" போன்ற வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறது.

குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல் ( Representational Image )

சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் அதிகப்படியான குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Representational Image
Representational Image

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, ``குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டு, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது அதைவிட பெரிய பிரச்னையாக குழந்தைகள் கடத்தல், காணாமல் போவது போன்ற பிரச்னைகள் உருவெடுத்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம்.

தமிழகத்தின் இரு முக்கிய குழந்தை குற்ற வழக்குகளின் இன்றைய நிலை என்ன?

2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியா முழுவதும் 3,18,748 குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக அரசின் சார்பாக நாடு முழுவதுமிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி மத்திய பிரதேசத்தில் 52,272 குழந்தைகளும், மேற்கு வங்காளத்தில் 47,744 குழந்தைகளும், குஜராத்தில் 43,658 குழந்தைகளும், டெல்லியில் 37,418 குழந்தைகளும் காணாமல் போயிருக்கிறார்கள். நாகலாந்து, மிசோரம், லட்சத்தீவு, தாத்ரா, நகர் ஹவேலி போன்ற இடங்களில் குழந்தைகள் காணாமல் போனதற்கான எந்த வழக்கும் இல்லை. மற்ற நகரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். குழந்தைகளைக் கண்டறியும் விதமாக, காணாமல்போன குழந்தைகளின் புகைப்படங்கள், அவர்களின் அங்க அடையாளங்கள் போன்றவை பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டு 'TrackChild ', Khoya Paya" போன்ற வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறோம்

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

இதன்படி, காணாமல்போன குழந்தைகள் இன்றைய வயதில் எப்படி இருக்கலாம் எனத் தோராயமான படங்கள் உருவாக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார்கள். காணாமல்போன குழந்தைகள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பான சர்வர் மூலம் (Secure File Transfer Protocol (SFPT) டெல்லி போலிஸ் பாதுகாத்து வருகிறார்கள். குழந்தைகளைக் கண்டுபிடிப்பதில் புது முயற்சியாக இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளின் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் புகைப்படங்களோடு, காணாமல்போன குழந்தைகளின் புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு குழந்தைகள் கண்டறியப்பட உள்ளனர்" என்று தெரிவித்தார்.